பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 183 இருப்பதால் இந்த ஆற்றைத் தேனருவி என்று மக்கள் பெயரிட்டு வழங்குகின்றனர். மக்கள் மனக் கருத்தையே பிரதிபலிப்பதைப் போல் பெரியாழ்வாரும், வான்காட்டி னின்றும் மாமலர்க் கற்பகத் தொத்துஇழி தேன் ஆறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே (4.2.4.) |வான் நாடு.உ.ம்பர் உலகு; தொத்து-கொத்து; இழி. பெருகும்) என்று பாடியுள்ளமை நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்த மலையிலிருந்தபடியே பெரியாழ்வாரின் திரு மொழிகள் இரண்டையும் (4.2; 4.3) வாய் வெருவப் பாடி பாடிப் பாசுரங்களின் சுவையிலும் நாம் நேரில் காணும் காட்சியிலும் ஆழங்கால் பட்டு ஆனந்தம் அடைய முடிகின்றது. மலையின் இயற்கைக் காட்சியில் ஈடுபட்டுள்ள நம் மனம், அறுகால் வரிவண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே (4.2:8) என்ற பாசுரப் பகுதியை எண்ணுகின்றது. மலையருவிகள் சந்தனக் கட்டைகளையும் இரத்தினக் கற்களையும் உருட்டிக் கொண்டு வருவதைப் பெரியாழ்வாரின், ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று ஒட்டருந் தண்சிலம்பா றுடைமாலிருஞ் சோலையதே (4.3:9) (ஒட்டரும்.ஒடிவாரா நின்ற) என்ற பாசுரப்பகுதியை நினைவுகூரச் செய்கின்றது. இவரு டைய அருமைத் திருமகளாரும்,