பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அதுபவம் 89 விளையாட்டாகவே செய்தவன் (9). ஆயிரம் திருத்தோள் களைப் பரப்பிக் கொண்டு, ஆயிரம் திருமுடிகளும் விளங்கும் படியாகவும் பரந்த ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேடன் மீது சயனித்தருளினவன் (10). இங்ங்ணம் இரண்டு திருமொழிகளினால் எம்பெருமான் திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் இருப்பை அநுபவித்த ஆழ்வார் எம்பெருமான் தன்னைப் பிரிந்து போகாதிருக்க அவரை வளைத்துக் கொள்ளு கின்றார். சிரீவில்லிபுத்துாருக்கு சிறிது தொலைதூரத்தில் உள்ள் திருமாலிருஞ்சோலை மலை எம்பெருமான்மீது இவர் தனி ஈடுபாடு கொண்டதை இதனால் (5.3) அறிகிறோம். 'பரத்துவம், அந்தர்யாமித்துவம், வியூகம், விபவம், அர்ச்சாவதாரம் என்று சொல்லப் படுவனவும், உன்னுடைய பிரவேசம் உள்ளனவுமான இடங்களிலெல்லாம் தட்டித் திரிந்து உன்னைச் சேவித்து, பலவகைத் துன்பங்களுக்கு இடமான இந்த உடலில் விருப்பை ஒழித்துக் கொண்ட அடியேன் இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னை விட்டு அகலேன்' (5.3:1). மாலிருஞ்சோலை எம்பெருமானே! நான் உன்னைச் சூழ்ந்து கொண்டேன். நீ என்னைப் பிரிய ஒருப்படேன்; நீ உனக்குள்ள மாயையினால் ஒளித்துக் கொண்டால் உன் பிராட்டியின் மேல் ஆணை (2). :மகரந்தம் உள்ள அரவிந்தத்தின் சுவையறிந்த வண்டு மீண்டும் ஒரு முள்ளிப் பூவைத் தேடி ஓடாதவாறு போல், உன்னுடைய கைங்கரியச் சுவையறிந்த அடியேன், இனி மற்றொருவன் வாசலைத் தேடி ஒடமாட்டேன்; அப்படி என்னை நீ ஒடவிட்டால் அஃது உன் மேன்மைக்கே குறை யாக முடியும், ஆதலால் அடியேனை நெறி காட்டி நீக்காது திருவுள்ளம் பற்றியருளவேண்டும்" (3).

பாண்டவரின் பட்சபாதியே பலகாதத் தொலைவும் அலைந்து திரிந்த எனக்கு அவ்விடங்களில் ஒதுங்குவதற்கு நிழலும் கண்டதில்லை; விடாய் போக்குவதற்கு நீரும்