பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 விட்டு சித்தன் விரித்த தமிழ் கடலினுள் ஈசுவரனாகிய அமுதத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்மாவாகின்ற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக் கொண்டனர் என்பது கருத்து. பகவததுபவாதிசயத்தினால் ஆன்மா வெள்ளக்கேடு படாமைக்காக இட்டகரை போன்ற சரீரமும் உருகப் பெற்றது. எனவே, இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்தில் ஆழங்கால் படுதல் அற்புதம் என்பது போதரும். நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும் (திருவாய் 9.5:2) என்று உருவற்ற நெஞ்சே உருகுகின்றதென்றால் உடலுருகுவதற்குச் சொல்ல. வேண்டுமா? ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே ரோய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே (5.8:1) என்ற திருவாய்மொழி ஈண்டு அநுசந்திக்கத் தக்கது. * உடலும் நெஞ்சும் உருகப் பெற்றதாகில், பின்னை இவ்வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ங்னே?’ என்று நஞ்சியர் பட்டரைக் கேட்க, விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்' என்பராதலால் அவ்வமுதம் வியாபித்தவிடமெங்கும் திருவுள்ளம் வியாபிக்கும் எனக் கொள்ளீர்’ என்று பட்டர் அருளிச் செய்தனராம். ஆழ்வாரின் அந்தர்யாமித்துவ அநுபவம் இன்னொரு விதமாகவும் வெளிப்படுகின்றது. பொன்னைக்கொண்டு உரைகல்மீதே கிறமெழ உரைத்தாற்போல உன்னைக்கொண்டுஎன் காவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன் உன்னைக்கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் (5.4:5) (நிறம் எழ.நிறம் அறிய: நா.அகம்பால்.நாவினுள்; என்னுள்.நெஞ்சினுள்; உன்னில் இட்டேன்.உனக்கு அடிமையாக்கினேன்.) -