பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 விட்டு சித்தன் விரித்த தமிழ் வழக்கம், அதுபோல கண்ணனும் என் மகளிடத்துக் காணப்படும் உருவ குணங்களில் ஏதாகிலும் ஒரு குறையைக் கூறித் தாழ்வு நினைத்து, இவளை வாசல் பெருக்குகின்ற தொழிலில் விடுங்கள் என்று புறத்தொழிலில் நியமித்து விடுவனோ? அன்றி முன்னமே பட்டம் கட்டிக்கொண்டு அந்தப்புறத் தலைவியராக இருப்பவர்களோடு சேர்த்து இவள் கருத்தின்படி இவள் இடைக்குலத்துத் தலைவி" என்று (தன் மனைவியானமை தோற்ற) பட்டம் கட்டி அந்தப்புரக் காவலில் வைப்பனோ?" என்றும் ஐயுறு கின்றாள் (7). அடுத்து, திருத்தாயார் தன் மனவருத்தத்தை அண்டை வீட்டிலுள்ள பெண்ணொருத்தியிடம் இவ்வாறு சொல்லு கின்றாள்: நங்காய், நற்குடியில் பிறந்தவர்கள் பெண்களை முறைப்படி வரைந்து கொண்டு வெளியில் இட்டுச் செல்லுவதில்லை என்ற ஒரு சம்பிரதாயம் உண்டு. அங்ங்ணம் செய்திலன் கண்ணபிரான்! இது செய்யா தொழியினும் ஒழிக! உலகில் சாமானிய மக்கள் செய்யும் முறைகள் சில உளவே, அவற்றையும் செய்திலன். இவளைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோனதும் போகாததுமாயிருக்க, இவளைத் தயிர் கடையவோ நியமிப்பது? இவ்வாறு எந்த நாட்டில் நடக்கும்? இளம் பருவத்தாளான என் மகள் இடம் வலம் கொண்டு தயிர்கடைய நேரிடும்போது இடைது.வண்டு உடல் இளைத்துப் பெருமூச்சு விட்டு இவ்வகை வருத்தங் களோடு தொடங்கின செயல் தலைக்கட்டுமளவும் இடை விடாமல் கடைக்கயிற்றையே பிடித்து வலித்து இழுத்தலால் தளிர் போன்ற இவளுடைய தடங்கைகள் தழும்பேறப் பெறாதோ?' என்று வருந்திக் கூறுகின்றாள் (8). அடுத்து, தயிர்கடையும் பேச்சு இன்னும் தொடர் கின்றது: பெண்ணே, கண்ணபிரான் என் மகளைத் தயிர் கடையும் தொழிலில் நியமித்து விட்டானாகில், அதனால் என் மகளுக்கு ஏற்படும் தொல்லைகளை அளந்து கூற