பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

కగ్రీ விட்டு சித்தன் விரித்த தமிழ் கந்தன் அவிழ்த்தாட அசைத்து அசைக்தி ஆடிக்கொண்டே வரும் அந்த ஆய்ச்சிமார் இன்னது செய்கின்றோம்!” என்பதையே அறியாதவர்களாய்த் தங்களையும் உலகத் தையும் மறந்து விடுகின்றார்கள். இப்படி ஆய்ப்பாடி ஏதோ ஒரு சிறப்பான அன்புச் சூழலில் அகப்பட்டதுபோல் கிறுகிறுத்துப் போய்விடுகின்றது. குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துச் சொல்லவேண்டும்: என்ற ஆர்வத்தால் புகுவாரும், வெளியில் வருவாருமாகப் பெருங்கூட்டம் நந்தகோபர் திருமாளிகையில் திரளு கின்றது. அவர்களில் சாமுத்திரிகா சாத்திரம் தெரிந்த வர்கள் இவ்வளவு அழகுள்ள ஆண் குழந்தையைப் பார்த்ததே இல்லை; ஒணத்தான் உலகாளும்!" என்று சொல்லிக்கொண்டு போகும் வார்த்தைகள் காதில் விழுகின்றன (1.2:3). ... ', . . . கொப்பரையில் மணப்பொருள்களும் மருந்துச்சரக்கு களும் இட்டுக் காய்ந்து குளிர்ந்த தண்ணீர் வைக்கப் பட்டுள்ளது. கைகால்களை மெள்ள நீட்டி, நிமிரச் செய்து நீண்டு நிமிர்ந்தான்! என்று குழந்தையைக் கொண் டாடிப் பசு மஞ்சள் உரைத்துப் பூசிப் பைய நீராட்டு கின்றாள் யசோதைப்பிராட்டி. பிறகு நோக்கை நீட்டு!" என்று சொல்லிக்கொண்டே, நாக்கு வழிக்க்த் தொடங்கு கின்றாள். பவளம் போன்ற வாயைத் திறக்கின்றது குழந்தை. வாய்க்கும் நாவுக்கும் வேற்றுமை தெரியாத பச்சைப் பிள்ளை என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தாய் குழந்தையின் வாயை நோக்கும்போது-ஆ! அது என்ன கனவா? நனவா?-சகல உலகங்களையும் காண் கின்றாள் அந்தத் திருவாய்க்குள்ளே! கையும் காலும் கிமிர்த்துக் கடாநீர் பைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் ஐய! நாவழித் தாளுக்(கு) அங் காந்திட வையம் ஏழுகண் டாள்பிள்ளை வாயுளே! (1.2:6) (கடாரம்-கொப்பரை; ஐய.அதிசயம்; அங்காந்திட. வாய் திறக்க,