பக்கம்:விதியின் நாயகி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逸i● நெஞ்சம் என் முதற் காதலுக்குப் பாத்திரமான குமாரின் தினேவு முகத்தை மறக்க வகையின்றித் தவியாய்த் தவிக் கின்றதே...உங்கள் சொத்தாகிவிட்ட நான், வேருெருவன் தினேவில் கிறுக்காகியிருப்பது முழுத்தவறுதான்; அறிகின் றேன். ஆஞலும் என் உடலின் உயிராய்விட்டது குமாரின் தினைவு. நான் தங்களைத் துறந்து செல்கிறேன். இல்லே யென்ருல், நான் நடைப்பினம்தான் குமாரை ஒருமுறைஒரே ஒரு கணமாகிலும் கண்டால்தான் என் இதயத்துள் விழுந்திருக்கும் இடைவெளி இட்டு நிரப்பப்பெறும்...இல்லை யேல் இனி மேனகை இல்லை.இவ்வுலகிலே!...-என்ருே கிறுக்கியிருந்த அக்கடிதத்தை அப்படியே மடித்து வைத்தாள். சகுந்தலே துஷ்யந்தனைச் சந்தித்தாள்; துஷ்யந்தன் சகுந்தலேயைச் சந்தித்தான். காதல் பிறந்தது. இது மேனகை-குமார் இருவரிடையிலும் காதல் பிறந்த கதை! மேனகை கனவு கண்டாள் பிரபல நடிகை ஆகவேண்டு மென்று. உரிய திறமை, நல்ல சாரீரம், அழகுத் தோற்றம், தாங்கும் பாகத்தை நன்குனர்ந்து நடிக்கும் சிறப்பு, எல்லாம் அவளுக்கு உடன்பிறந்த சிறப்பியல்புகள். முதன் முதலில் சகுந்தலே நாடகம் அவளே சகுந்தலையாக உலகிற்கு அறிமுகம் செய்வித்தது. குமார் அந்நாளைய நாடக உலக அயன் ராஜ பார்ட் முள் எடுக்கும் பாவனையில் துஷ்யந்தனைச் சந்திக்கும் கட்டம் குமாரையும், மேனகையையும் சேர்த்து ரசிகர்களைப் போற்றிப் புகழச் செய்தது. இதயத்தோடு இதயம் சேர்ந்து உடலோடு உடல் இணைந்து சகுந்தலை, துஷ்யந்தனைப் பிரியும் போது-அவள் தளிர் விரலில் மன்னனின் கணையாழி பூட்டப் பட்டுப் பிரியும்போது மேனகையின் உடலின் ஒவ்வொரு துடிப்பிலும் அதிர்ந்த அம்மோனச் சுழல் எங்கே? அக்கனை யாழி என்னும் உயிர் நினைவுச்சின்னம் தந்தச்சிமிழை அலங் கரித்தது. அவளுக்கு அது தாஜ்மஹால் போல ஆல்ை, அவள் அவனுடைய தாஜ்மஹாலாக வாய்ப்பில்லையே! காதல் ஓர் எழிற் கனவேதான? -