பக்கம்:விதியின் நாயகி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317 காஜா பொடியன் கொடுத்த சாயாவை, ஒரே மடக்கில் குடித்துத் தீர்த்தான். வெட்டு மேஜையில் அம்பாரமாகக் குவித்திருந்த வெட்டப்பட்ட துணி ரகங்கள் அவனைச் சொக்க வைத்தன: இந்தச் சாலையிலே என் கைக்கு ஒரு தனி மவுஸ்தான்! அதான் இந்த ஐயாவோட கை மகிமை பாக்கும்!” சமயம் வாய்த்த போதெல்லாம் நாட்டுக் கட்டை” பவளக்கொடியிடம் வாய் ஓயாமல் பெருமையடித்துக் கொண்ட பேச்சை இப்போது அவன் தனக்குள் தம்பட்மடித்துக் கொள்ளலாளுன், சின்னமுத்து. பவளக்கொடியின் ஞாபகம் அவனுக்கு இருட்டை நினைக்கத் துாண்டாமல் இருக்குமா? - ‘பாவட்டா பீடி? புகைந்தது *அண்ணுச்சி!...” ரத்தம் உறைந்து விட்ட மாதிரியான ஒரு திகிலுணர்வு கண் இமைக்கும் நேரம் அவனுள் எழுந்து, அவனை ஆட்டி வைக்கவே செய்தது. உடன் பிறந்த தங்கச்சிதான் அழைக்கிருளோ என்றுதான் அவன் எடுத்த எடுப்பில் நினைத்தான்; குழம்பினன். எங்கோ சுற்றிய காட்டு முல்ல்ே பவளக்கொடியை மோப்பம் பிடித்து வலைவீசிக் கடத்தி வந்தான் அவன். ஊருக்கு ஒதுக்கத்தில் தங்க் வைத்தான். சேதி அவன் குடும்பத்துக்குத் தெரிந்தது. நீ கெட்ட கேட்டுக்கு கீப்-வைப்பாட்டி வேறேயா? என்று இரைந் தனர் பெற்ருேர் நாட்டுக் கட்டை பவளக்கொடியின் மயக்கத்தில் குடும்பத்தைப் பகைத்துக் கொண்டான். அவன் 'குடி’யும் குடித்தனமும் ஆளுன். இந்நிலையில் அவன் தன் தங் கையை அப்போது எப்படித்தான் எதிர்பார்த்தானே, பாவம்: சின்னமுத்து பெரிய விழிகளை உருட்டிவிழித்து' ஏறிட்டு நோக்கினன்: யோரு, தெய்வானையாங்காட்டி?’ என்று. அதிசயம் மூளக் கேட்டான். -