பக்கம்:விதியின் நாயகி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பா இதோ, புதுக்கோட்டை வந்துவிட்டது: 'எதையுமே மனசிலே நினைக்காமல்,ரொம்பவும் ஜாக்கிர தையாய் இறங்க வேணும், கமலம். பாப்பா பத்திரம்!” என்று எச்சரிக்கை செய்து கொண்டே, பஸ்ளிலிருந்து இறங் கின்ை சண்முகம். கித்தான் பை இடது தோளுக்கு மாறியது. அவன் பார்வை படிக்கட்டில் பதிந்திருந்தது. அந்த மண் உண்டுபண்ணிய சலனத்திற்கு - நினைவுகளின் சலனத்திற்கு ஈடு கொடுப்பதில் முனைந்தது உள்ளம்.'ஊம்... பார்த்து...ம் மலர் விழியை எங்கிட்டே கொடுத்திடு. எஸ். ஆல் ரைட்!?? என்ருன். குழந்தை அவனை அடைந்தது தான் தாமதம், உடனே ம்ே...மா’ பாட்டுப் பாடத் தொடங்கியது. 'அழாதேடா ராஜா ஐயோ ஈஸ்வரா!..அழாதேம்மா... அழப்படாதம்மா’-தவித்தான் சண்முகம், ஏக்கமும் தடுக்கமும் முயங்கின. குழந்தையை அணைத்துக் கொண்டான். அதை அமைதிப் படுத்துவதற்குள் போதும்போது மென்று ஆகிவிட்டது. மேனியின் உள்வசமான நடுக்கம் இன்னமும் ஓயவில்லைதான். வேர்வை சட்டைக் காலரை நனைத்தது. *இந்த்ா கமலம், உன் மகளை வாங்கிக்க. அதுக்கு அப்பாவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/32&oldid=476442" இலிருந்து மீள்விக்கப்பட்டது