பக்கம்:விதியின் நாயகி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 அமர்ந்திருந்தவள், எழுந்து ஊஞ்சலில் அமர்ந்தாள். அந்த நாளிலே நானும் இவரும் இந்த ஊஞ்சலிலே நலுங்கின்போது அமர்ந்து மஞ்சள் நீராடின நிகழ்ச்சி நேற்று நடந்தது மாதிரி அல்லவா தோன்றுகிறது? சுற்று மதிலைத் தாண்டிக்கொண்டு வந்தது தெருநாயொன்றின் அழுகைச் சத்தம். அவளது மேனி அதிர்ந்தது. அவளையும் அறியாமல், கரங்கள் தொழு தன. வாடைக் காற்று பலத்தது. ஆகவே, ஜன்னலில் நெளிந்த இளநீலத் திரையை இழுத்து மூடினுள். பிறகு, அங்குமிங்குமாக நடைபயின்ருள். கடைக்குட்டிப் பயல் ஆழ்ந்த உறக்கத்திற்குக் கப்பம் செலுத்தியவண்ணம் இருந் தான். கலைந்து கிடந்த போர்வையைச் சரிசெய்தாள். ஸ்டுவில் வைக்கப்பட்டிருந்த பூஞ்செடிப் பாத்திரம் அவனே இடறி விட்டது. நகக்கண் வலித்தது. குனிந்து நிமிர்ந்தாள். அந்தப் புகைப் படத்தையே ஒர் அரைக்கணம் இமைக்காமல் நோக்கினுள், கமலாட்சி-கார்த்திகேயன் இணை நீடு வாழ்க!” என்ற வரிகள் பளிச்சிட்டன. 'ஆஹா!’ என்று வாயை விட்டுச் சொல்லிக் கொண்டாள் அகிலாண்டம். தன்னுடைய பத்து நாளைய வேதனைக் குமைச்சலை நொடிப்போதில் மறந்து போளுள். தனக்கு இனி குறைவேதும் கிடையாது என்ற தைரியம் எழுந்தது. தன்னை மறந்து சிரித்தாள்: கோடம்பாக்கம் நெடுஞ்சாலை கண் விழித்தது. வைகறையின் துயில் நீக்கம், அந்தச் சாலையின் அமைதி போர்த்த பாதை நெடுகிலும் பிரதிபலித்தது. கீழே மணிச்சத்தம் கேட்டது. அதற்கு வாய்த்த பின்னணி இசையென இராஜபாளையமும் குரல் கொடுத் தது. இரு குரல்களும் பங்களாவின் கீழ்த்தளத்தைக் கடந்து மாடிப்படி ஏறி வந்தன. ‘. . . &: * , அகிலாண்டம், மாடி வராத்தாக் கைபிடிச் சுவரில் நின்ற வாறு, கீழே பார்த்தாள். விளக்குகள் எரிந்தன. வேலைக்காரி சுறுசுறுப்புடன் எழுந்து, பால்பாத்திரத்தை எடுத்துக் கழுவி, தரையில் தொப்பென்று கை தவறிப் போட்டு, பின்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/5&oldid=476415" இலிருந்து மீள்விக்கப்பட்டது