பக்கம்:விதியின் நாயகி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 33 அவள் எழுதியிருந்ததாக நீங்கள் நினைத்திருக்கும் அக்கடிதம்என்னே மணந்து கொள்ளக் கோரியிருந்த அக்கடிதம்-நான் எழுதியது. உங்கள் மனத்தை மாற்ற என் மனோதத்துவம் கற்பித்த பாடம்! அத்தான், என்னை மன்னியுங்கள். என் மனச்சாட்சி கடந்த சில நாட்காளாக எனக்குத் தக்க தண்டனையை அல்லும் பகலும் கொடுத்து விட்டது, மாமா!...” என்று அழுதாள் மா வினி. இந்த முடிவைச் சுதர்சன் எவ்விதம் எதிர்பார்த்திரும் பார்? அவர், கண்களில் கனல் பறக்க நின்று கொண்டிருந் தார். எதிரே இருந்த அவரது முதல் மனைவி சாந்தினியின் புகைப்படம் அவரை ரம்பம் கொண்டு அறுப்பது போன்ற உள்ள வேதனை எய்திஞர் அவர். - துரோகி” என்று ஒலமிட்ட அவர் தன் மனைவி மாலினியை ஓங்கிப் பிடித்துத் தள்ளிஞர். அவள் தரையில் தஞ்சமடைந்தாள்: ரத்தம் குமுறிப் பாய்ந்து அவளுடைய பொற்பாதங்களைத் தஞ்சமடைந்தது. கடைசி மூச்சும் பிரிந்தது. மறுநாள் சுதர்சனுக்கு ஒரு கடிதம் வந்தது. அன்புக் கணவர் அவர்களுக்கு, உரிமை பாராட்டி அழைக்கிறேன்-உரிமையை அனு: புவிக்க கொடுத்து வைக்காதவளாகி விட்டாலும்! உங்களை என் பதியாக என்ருே வரித்தேன். உங்கள் மனைவி நான்: என்று என்னுள் ஒரே முறை கூறிக்கொண்டாலும் போதும் என்ற துடிப்பு வெறியில் உழன்ற நான், வெற்றி பெற்றேன். சாத்தினி எழுதியது போல நான் அன்று உங்களுக்குக் கடிதம் எழுதி வைத்தேன். குற்றந்தான்! அதை என் ஆயுட் காலக் முழுதும் மறைத்து வைத்திருக்கலாம். என் மனக் ட்சி என்னை வதைத்தது. ரகசியத்தை உங்களிடம் கூறி o நீங்கள் எரிமலையாக வெடிப்பீர்கள் என்பதையும் அறிந்தேதான் இதோ, இந்தப் பாலை அருந்தி உங்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/96&oldid=476506" இலிருந்து மீள்விக்கப்பட்டது