பக்கம்:விதியின் நாயகி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 சிவப்பு வினுடிமுள், கண்ணுக்குத் தெரியாத அயைப் புடன் கடமை இயற்றிக் கொண்டிருந்த நிமிஷ முள்ளைச் சுற்றிச் சுற்றி வேகமாக ஓடியது. அந்தி வானத்தில் மலர்ந்து விளையாடிய விந்தைக் கோளங்களின் வர்ணக் கோலங்கள் மாடித் தாழ்வாரத் இனக் கடந்து கூடத்தில் இழைந்து, இறைந்து கிடந்தன. அழகேசன் ஆரோக்கிய மலர்ச்சியுடன், தலைமுடியைக் கோதி விட்டவகைக் கூடத்துக்கு வந்தான். எச்சில் கோப்பை யும் கையுமாக சுந்தரி அம்மாள் நின்ருள். அைம்மா!?? தேம்பி, ராத்திரிக்குப் பலாச்சுளை வத்தல் போட்டுக் குழம்பு வைக்கச் சொல்லவா? உனக்கு இஷ்டமான வடகம், చో?! 意 - {ଘ w • - 33 - • ή o rt o' அப்பளிமும் பொறிச்சுப்பிடறேன், எனறு கேட்டாள் தாய். 'உங்க இஷ்டம், அம்மா!’ ‘'என் இஷ்டம் எல்லாம் அடுத்த வாரம் ஆவணி பிறக்கிற மட்டுந்தானே, அழகேசா??? அழகேசன் தன் அன்னையின் அருள் நிறை அன்பு முகத்தை, பக்தி மண்டித்தழைத்த பாச உணர்வுடன் நோக்கினன். விழிகளிலே கண்ணிரின் சுழிப்பு: மெய் வெளி பில் அழுந்தப் பதிந்த நடுக்கம்: இதயத்தின் அடிமட்டத் தளத்தினில் அழகுருக்கொண்டஇன்பக்கனவின் நிழலாட்டம். சுய நினைவை மறப்பதற்கும் நேரம், காலம் உண்டல்லவா?

  • அப்படி ஏனம்மா சொல்றீங்க? உங்கள் இஷ்டத்துக்கும் விருப்பத்துக்கும் தான் அம்மா இங்கே முதல் இடமும் முதல் மரியாதையும் முதல் மதிப்பும் உண்டு!...நான் கைப் பிடிக்கும் அபர்ணு, உங்களை முதலில் பெருமைப்படுத்திசந்தோஷம் அடையச் செய்து, அப்புறந்தான் என்னவளாக மாறுவாள், அம்ம்ா! பெற்றவளுக்குப் பின் தான்ே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/99&oldid=476509" இலிருந்து மீள்விக்கப்பட்டது