பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் சிறுகதைகள் " சிா. கந்தசாமி விந்தன் சமூகத்தின் பொருளாதார நிலையில் மிகவும் பிற்பட்டிருக்கும் மககளைப் பற்றித் தார்மீக நோக்கில் எழுதியவர். ஆனால் சீர்திருத்தம் முற்போக்கு என்று எந்தக் கட்சியின் சித்தாந்தத்தோடும் தன் எழுத்தை இணைத்துக் கொள்ளாதவர். கசிந்துருகவும் - கண்ணிர் சிந்துதலுமின்றி ஏழ்மையை ஏழ்மையாக - அப்பாவித் தனத்தை அப்பாவித்தனமாக கொடூரத்தைக் கொடூரமாகக் கொஞ்சம் அழுத்திச் சொன்னவர் இவர், ஏழைகள் எல்லோரும் நல்லவர்களாகவும், பணமில்லாதவர்கள் எல்லோரும் அப்பாவிகளாகவும், நீதிக்கும் நேர்மைக்கும் அதி முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாகவும். அதனால் வாழ்க்கையை இன்னும் ஏழ்மையிலும் - துன்பத்திலும் ஆழ்த்திக் கொள்கிறவர்களும் - பணக்காரர்கள் எல்லோரும் கொடுமைக்காரர்களாகவும் ஏழைகளை சுலபமாக ஏமாற்றி, தம்மை வளம்படுத்திக் கொண்டவர்களாவும் - வாழ்க்கையைப் பிரித்துக் காண்பது விந்தனின் தத்துவமாகிவிடுவதால் - கதைகள் பலவீனமடைந்து விடுகின்றன. இயற்கையை இழந்து விடுகின்றன. உண்மையானதும் இயல்பானதுமான வாழ்வு அகல - பொய்யானதும் - செயற்கையானதுமான ஒரு வாழ்க்கை கதையாகிறது. இதனால் வாழ்வின் பல்வேறு வீச்சுக்களையும் காண முடியாமல் போய் விடுகிறது. அது மட்டுமல்ல, ஒரு கதை மாதிரியே இன்னொரு கதை அமைந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து மற்றொன்று. ஒரே ஐடியா பல்வேறு படங்களில் வேறு பட்ட மனிதர்களின் மீது ஏற்றி