பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 17 இளநகை, இளஞ்சின, இளஉவர்ப்பு உவப்பு, கலைகளை உண்டு பண்ணிவிடுகின்றன. இவற்றின் மூலம் சமுதாய வாழ்வையே அவர் தலைமுறைக்குள் மாற்றிவிடும் ஆற்றல் அவர் புகழ் பெற்ற படைப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர் வ. ரா. எழுத்தாளர் வ.ரா.வுக்கு நல்ல தோ, கெட்டதோ எந்த உணர்ச்சியும் கிடையாது. அவர் ஒரு புகைப்படக் கருவி போன்றவர். காட்சிகளைத் தேர்ந்தெடுக்கும் திறனும், வரிசைப்படுத்தி முன்வைத்து விடும் திறனும் மட்டும் அக்கரு விக்குப் பின்னணியிலுள்ள கலையுள்ளத்துக்கு உண்டு. இந்நிலையில் அவர் உணர்ச்சியின்மையே காற்றலையில்லாத இடத்தின் சுடர்போல, அவர் படைப்புகளுக்கு அழகு நயமும் உணர்ச்சியாற்றலும் தந்து அவற்றைப் பேச வைத்துச் செயலாற்றிவிடுகிறது விந்தன் எழுத்தாளர் விந்தனிடம் அழகுணர்ச்சி, திட்டமிடுந்திறன், நகைச்சுவை ஆகிய எந்த மென்மை நயமுடைய உணர்வுகளும் கிடையாது. ஆனால் இவை தவிா, மற்ற வன்மைத் திறமுடைய கோபம், வெறுப்பு, கேலிநகை, இகழ்ச்சி ஆகிய எல்லா உணர்ச்சிகளும் உண்டு. டிக்கன்ஸ் வாசகருடன் மேற்கொண்டுவிடும நேசபாசத் தொடாபு, வ.ரா. மேற்கொள்ளும் புகைப் படங்களின் இளநகைத் தொடர்பு ஆகிய இரண்டையுமே அவர் மேற்கொள்வதில்லை. ஏதிலா அயலார் - நகரத்தாரை வலிந்து பேச்சுக்கு இழுக்கும் நாட்டுப்புறத்தார் பாணியிலேயே அவர் வாசகரை அடிக்கடி வம்புக்கிழுத்துப் பேசுபவர் ஆகியுள்ளார். ஆனால் இவையே எழுதுபவர், வாசிப்பவர் என்ற வேற்றுமை வேலியை மறக்க வைத்து, வாசகரைத் தாமே நேரில் காண்பவராக, கேட்பவராக, கதை உறுப்பினருடன் ஒர் உறுப்பினராக இயங்க வைத்துவிடுகிறது கவர்ச்சி நாடாத உணர்ச்சிகளை உடைய எழுத்தாளராகிய விந்தனின் எழுத்தில் இயல்பாக ஏற்பட்டுவிடும் கவர்ச்சி, திட்டமிடாத கலைஞனாகிய விந்த னின் கலைப்படைப்புகளில் இயல்பாக ஏற்பட்டுவிடும் திட்டப் பண்பு ஆகியவற்றின் மறைதிறவு இதுவே!