பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 19 நம்பிக்கைகளில் மாற்றங்களோ அல்ல. மிகப் பெரிய மாற்றங்கள் என நாம் கருதும புரட்சிகள் கூட அல்ல. அவருடைய பேருணர்ச்சிகள் சமுதாய முழுவதையும் மாற்றியமைக்கும் விரிவாட்சியை மட்டுமன்றி, குடும் பத்தின் ஆண் பெண் உறவுகளை மாற்றியமைக்கும் ஆழத்தையும், மனித இனத்தையே மாற்றியமைத்துவிட எண்ணும் ஆழ்கடல் உயரமுள்ளடங்கிய பாரித்த அளவையும் கொண்டிருந்தன. ஓ, மனிதா! என்ற மகுடமிட்ட அவரது தொடக்க காலச் சிறு கதைத் தொகுப்பு, மனிதன் என்ற அவரது வெளியீடு ஆகியவை தம் பெயராலேயே இந்த c多绰 அகல Զ- ԱՄ Մ வீச்சைக் காட்டுபவையாயுள்ளன. மனிதனின் அறிவும் உணர்ச்சியும் உடைய ஒரு விலங்கு அல்லது பறவை நிலையில் நின்று அவர் மனித இனத்தின் வாழ்க்கையையே அலசுவார்! மனித இனத்தின் பேராளாய் நின்று சமயவாதிகள் வருணித்துள்ள கடவுளைக் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்துவார். ஆணின் அறிவராய்ச்சியையும் ஆணின் உணர்ச்சிகளையும் ஒருங்கே கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து, அப்பெண்ணின் நிலையிலிருந்து ஆணினத்தையே சந்திக்கு இழுப்பார். இன்னொரு நாயை அல்லது மனிதனை அல்லது குதிரையைக் கண்டுதான் நாய் குரைக்கும். கோபுரத்தைக் கண்டு குரைக்காது. எவரது விருப்பு வெறுப்புகளும் சமநிலை அளவிலுள்ளவர்களிடமோ, தனி மனிதர் அல்லது குழுக்கள் அல்லது கட்சிகளிடமோதான் செயல்படுமே தவிர, எல்லையற்றப் பரந்த வெளிகளிலோ, அனைவரையும் பாதிக்கும் செய்திகளிலோ செயல்பட மாட்டா எழுத்தாளன் விந்தனின் உணர்ச்சிகளும் சரி, படைப்புகளின் நோக்குகளும் சரி இந்த எல்லைக ளெல்லாம் கடநதவை. அவை கடல் போன்ற பரப்பு, நிலவுலகம் துளைக்கும் சுரங்கம் போன்ற ஆழம், மலை, வானம் போன்ற பேரகற்சியுடையவை. இத்தன்மையே அவரிடம் எவருக்கும் உள்ளுவர்ப்பற்ற நிலைக்கு, கவர்ச்சிக்கு உரிய மறைதிறவு ஆகும். குழந்தைகளும வியப்பார்வத்துடன் வாசிக்க வல்ல ஆங்கில வசை இலக்கிய ஆசிரியர் சுவிப்ட் (Swift) என்பாரைப் போல அவர்