பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விந்தன் இலக்கியத் தடம் "இந்த நிலையில் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவாயிருக்கும்? உயிரின்மீதுள்ள ஆசையா? - ஆம், உயிரின் மீதுள்ள ஆசைதான்.” பிறிதொரு சந்தர்ப்பத்திலே மனத்திலே உறுதி பிறக்கிறது. "அந்தத் துரோகிக்காக நான் ஏன் உயிரைவிட வேண்டும்? அதனால் நான் அடையப் போகும் நன்மைதான் என்ன? - மற்றவர்களைப் போல நானும் சமூகத்தின் அனுதாபத்தை வேண்டுமானால் பெறலாம். செத்துத்தான் அந்த அனுதாபத்தைப் பெற வேண்டுமென்றால் எனக்கு அது வேண்டாமே!.... ஆம்! சமூகத்துக்கும் நான் பலியாகமாட்டேன். அந்தச் சண்டாளனுக்கும் பலியாகமாட்டேன். இரு தரத்தாரும் எனக்கு வேண்டுமானால் பலியாகட்டும்.” கல்லாகி நின்று சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்ற, பெற விரும்பிய அகலிகைக்கும் இந்த அகல்யாவுக்கும் வேறுபாடு அதிகம். இவள் கனகலிங்கத்தைக் கைக்குள் போட்டுக் கொள்ளப் படாதபாடு படுகிறாள்; அவனை மயக்கப் பார்க்கிறாள், ஓரளவு உறுதி பெற்று மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கும்பொழுது சமூகம் குறுக்கிடுகிறது. "இதோ போகிறாள் பார். இவள்தான் அகல்யா என்று அவளைச் சுட்டிக் காட்டினாள் அவர்களில் ஒருத்தி. ‘ எனக்குத் தெரியுமே! யாரோ ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள் என்று சொன்னார்களே. அவள் தானே இவள்? என்றாள் இன்னொருத்தி. "ஆமாம்; ஆனால் ஓடிப்போகவில்லையாம். நடந்துதான் போனாளாம்’ என்றாள் மற்றொருத்தி, களுக்கென்று சிரித்துக்கொண்டே. “எனக்கு யாரோ பறந்து போனாள் என்று சொன்னார்களே, என்றாள் வேறொருத்தி, கலகல வென்று நகைத்துக்கொண்டே." இந்தக் கட்டம் புதுமைப் பித்தனின் சாபவிமோசனத்திலும் சுருங்கிய வடிவில் வருவது நினைவிருக்கலாம்.