பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

விந்தன் கதைகள்

ஆம், தீயர்கள், திருடர்கள், தீராத நோயாளிகள், திக்கற்றவர்கள் இவர்களின் மத்தியிலே உழைப்பாளியான அவனும் உயிருக்கு மன்றாடிக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

வயிற்றுப் பிழைப்பையொட்டி அவன் வழக்கம் போல் வீதிகளில் பவனி வரும்போது, சில வீடுகளில் முன்சுவரில் பின் வருபவை போன்ற கல்வெட்டுக்கள் காட்சியளிக்கும்;

“1930 மே மீ 7உ மொட்டையம்மன் தேவஸ்தானத்துக்கு முல்லைவனம் ஜமீன்தார் ஸ்ரீ முருகேச முதலியார் பாரியாள் ஸ்ரீமதி முத்தம்மாள் எழுதிவைத்த வீடு.”

இந்தக் கல்வெட்டுக்களைப் படிக்கும்போது, “ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவனுக்கு இந்த வீடு என்னத்துக்கு வாசல்தான் என்னத்துக்கு?” என்று அவன் நினைத்துக் கொள்வானோ என்னமோ, தன்னையும் அறியாமல் சிரித்து விடுவான்!

***

ரு நாள் வழக்கம்போல் தான் தங்கியிருக்கும் வழிநடைப் பாதையிலே, படுப்பதற்காகப் பழைய கோணிக் கந்தையொன்றை உதறிப்போட்டுக் கொண்டிருந்தான் குப்புசாமி.

வானத்தில் சந்திரன் இல்லை; வீதிகளில் விளக்குகளும் இல்லை.

ஏற்கெனவே அவனுக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல். சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் மிக்சர் என்று சொல்லி அனாயாசமாக ஊற்றிக் கொடுக்கும் வர்ணத் தண்ணீரை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். குணம்தான் அவன் உயிரோடு இருக்கும் வரை தெரியப் போவதில்லையே!

இந்த அழகில்தான் அன்று காற்றும் மழையும் கலந்தடித்தது. மனிதர்களைப் போல் தன்னை வஞ்சிக்காத காற்று, மழையின் கருணையை எண்ணி அவன் மகிழ முடியுமா? வேதனையுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். வீடு வீடாகச் சென்று எட்டிப் பார்த்தான். படியில், நடையில், வழியில், வராந்தாவில் - எந்த மூலையிலாவது கொஞ்சம் இடம் கிடைக்குமா என்று தான்

“அம்மா”, “ஐயா!” என்று வாசலில் நின்றபடி அவன் கத்தினான். அவனுடைய கதறலைக் கேட்டு “ஐயோ!” என்று இரங்குவாரில்லை; “வா” என்று வழி விடுவாரில்லை.