உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்ப துன்பம்

திருச்சி 4-5-43

ன்புள்ள ஹம்ஸா!

நீ என்னுடன் இரண்டு நாட்கள் தங்கி யிருந்த போதே உன் முகத்தில் ஒருவிதமான ஆச்சரிய பாவம் குடி கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம் என்னவென்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது உன் கடிதத்தைப் பார்த்தபோது தான் அந்தக் காரணம் எனக்குத் தெரிந்தது.

"எந்நேரம் பார்த்தாலும் ஈஸிச் சேரில் சாய்ந்து கொண்டு, எப்போதும் வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருக்கும் உன் கணவரை இரண்டு நாட்கள் என்னால் பார்த்துச் சகிக்க முடியவில்லையே. அவரை இரண்டு வருஷங்களாக நீ எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? கை நிறைந்த பொன்னைவிட கண் நிறைந்த கணவனே மேல் என்பார்கள். அப்படியிருக்க நீ எப்படி அந்த மனிதரைக் கல்யாணம் செய்துகொண்டாய்? அவருக்குச் செய்யும் சிச்ருவுை போதாதென்று அவருடைய நாலு குழந்தைகளையும் வேறு கட்டி அழுதுகொண்டிருக் கிறாயே. நிஜமாகவே நீ அவருக்கு மனைவியா யிருக்கிறாயா? அல்லது அவர் வீட்டு வேலைக்காரியா யிருக்கிறாயா? - இத்தனை கஷ்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நீ எப்பொழுது பார்த்தாலும் எப்படி மலர்ந்த முகத்துடன் இருக்கிறாய்? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்லித் தான் தீரவேண்டும்" என்றெல்லாம் நீ உன் கடிதத்தில் எழுதியிருக்கிறாய். இதோ, அந்த ரகசியம் என் கதையில் இருக்கிறது.

* * *

சென்னையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு சிநேகிதர் கிடைத்தார். அவர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார். அப்புறம் எப்படிக் காதலரானார் என்பதைப் பற்றியெல்லாம் இப்பொழுது நான் சொல்லத் தயாராயில்லை; அப்படிச் சொல்வதும் அவசியமில்லை.

வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த அவர், ஹாஸ்டல் வாசத்தை விரும்பாமல் ஒரு தனி அறை எடுத்துக் கொண்டு