பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

விந்தன் கதைகள் தமிழ் வாசகர்களின் மனங்களில் நிரந்தரம் கொண்டவை.

சென்ற ஆண்டு கோலாலம்பூரில் எங்கள் மலேசிய-இந்தியதமிழ்ப் புத்தகக் காட்சியை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சாமிவேல் அவர்கள் திறந்துவைத்து அரிய சொற்பொழிவாற்றி மகிழ்வித்தார். அவருடைய தமிழ் ஆர்வமும், புத்தகங்களின் பால் கொண்டுள்ள ஈடுபாடும் உலகறியும். அவருடைய அன்பான ஆதரவாலேயே புத்தகக் காட்சி சிறப்புற்றது.

அடுத்த சந்திப்பின்போது விந்தன் கதை படிக்க விரும்பினார். கிடைத்த சில புத்தகங்களை மட்டுமே தர முடிந்தது.

இந்த நேரத்தில் திரு.மு. பரமசிவம் அவர்கள் விந்தன் மகன் திரு. சூர்யமூர்த்தியை அழைத்து வந்து விந்தன் கதைகளை வெளியிடக் கொடுத்தார். டத்தோ ஸ்ரீ சாமிவேல் அவர்களின் விருப்பம் நிறைவேறுவது போல் ‘விந்தன் கதைகள்’ புத்தகம் அமைந்துள்ளது.

விந்தன் கதைகளின் சிறப்புகளை கல்கி.ரா. கிருஷ்ணமூர்த்தி, கி. சந்திரசேகரன், மு. வரதராசன் எழுதிய முன்னர் வெளிவந்த புத்தகத்துக்கு எழுதிய முன்னுரைகள் விந்தன் கதைகளுக்குச் சூட்டியுள்ள புகழுரைகள். அடுத்த பக்கங்களில் மறுபிரசுரம் செய்துள்ளோம். இந்தத் தலைமுறையினருக்கு இவை சரியான அறிமுகமாகத் திகழ்கிறது.

விந்தன் கதைகளை ஒரு சேரப்படிக்க இந்தப் புத்தகத் தொகுதி வாசகர்களுக்குப் பெருவிருந்தாகும்.

இந்த நூல் வெளிவர் உதவிய திரு. மு. பரமசிவம் அவர்களுக்கும் விந்தன் மகன் திரு. சூரியமூர்த்தி அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.

மா. நந்தன்