பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன் குட்டிக் கதைகள்

 

மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும். இதனால் சமூகம் மேன்மையுறும் என்று சொல்லியுள்ள அற நூல்கள் அனந்தம்.

ஆனால் யதார்த்த வாழ்வின் நிகழ்வுகள் தாறுமாறாக நடந்துவிடுகின்றன. அது அறியாமையாலும் அலட்சியத்தால் மிகுதியாகவும் அறங்கேறி விடுகின்றன.

அமரர் விந்தன் சமூகத்தின் மனசாட்சியாக இந்தக் குட்டிக் கதைகளில் இது போன்ற நிகழ்வுகளை எள்ளி நகையாடுகிறார். அங்கதத் தொனியில் அம்பலப்படுத்துகிறார்.

படிக்க சுவையான கதைகள். நிறையவே யோசிக்க வைக்கும் சிறப்பு விந்தன் குட்டிக் கதைகளுக்கு உண்டு.