பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


"அட புத்திசாலி பிறரை மேலே ஏற்றிவிடத்தான் என்னால் முடியும்; நான் நினைத்தாலும் என்னால் மேலே ஏறமுடியாது என்று ஏன் உனக்குத் தெரிய வில்லை?"

荔,莎莎

27. அறியாமை

கட்டிட வேலை முடிந்ததும், அதற்காகக் கட்டப் பட்டிருந்த சாரங்களையெல்லாம் அவிழ்த்துக் கீழே விட்டெறிந்து கொண்டிருந்தார்கள் கொத்தனார்கள்.

"அக்கறை தீர்ந்துவிட்டது; இனி யார் நம்மைக் கவனிக்கப்போகிறார்கள்?" என்றது ஏணி.

"வருவோர் போவோரெல்லாம்கூட 'ஆஹா! எத்தனை பெரிய மாளிகை, எவ்வளவு அழகான மாளிகை என்றுதான் சொல்லப்போகிறார்களே தவிர, அவற்றுக்கெல்லாம் காரணமாயிருந்த நம்மைப்பற்றி யார் ஒரு வார்த்தை சொல்லப் போகிறார்கள்?" என்றது சாரம்.

கட்டிடம் சிரித்தது; 'ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டது சாரம்.

"ஒன்றுமில்லை; பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டும்கூட அஸ்திவாரம் தன்னைப்பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லிக்கொள்ளாமல் இருக்கிறதே, அதை எண்ணித்தான் சிரிக்கிறேன்!” என்றது கட்டிடம்.

荔,荔,荔