பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

" நரி தன் காதுகளை முறுக்கியது; பற்களை நறநற என்று கடித்தது. நான்கு கால்களாலும் பிராண்டியது. ஆனாலும் வேடன் நரியை பைக்குள் திணித்துக் கொண்டான்.

சரி, நாரையையும் எடுத்துக் கொண்டு போவோம் என்று வேடன் பின் பக்கம் திரும்பினான்.

புல்தரை முழுவதும் தேடிப் பார்த்தான். அங்கு நாரையைக் காணவில்லை மேலேப் பார்த்தான் வேடன். நாரை வெகு தொலைவில், அம்புகளுக்கு எட்டாத தூரத்தில் பறந்து கொண்டு இருந்தது.

தனது அறிவைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்ட நரியின் கதி இப்படி ஆயிற்று! நாரைக்குச் சிறிய தலையானாலும் அது சாமார்த்தியமாகத் தப்பிவிட்டது!