இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னொரு காலத்தில் ஏழை ஒருவனிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் நிலமிருந்தது. அதைத் தன் ஜீவனோபாயமாகக் கொண்ட அவன் இரவு பகலாக அதில் பாடுபட்டு வந்தான்.
வசந்த பருவம் வந்தது. வழக்கம்போல நிலத்தை உழத் தொடங்கினான் அந்த ஏழை. அப்போது தற்செயலாக ஆகாயத்தை நோக்கினான் அவன். ஒரு கொக்கு பறந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்தக் கொக்கு உழவோட்டப் பட்டிருந்த