பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு

காண்பவர்களின் கருத்தினைக் கவர்ந்திழுக்கின்ற அளவுக்குக் கவர்ச்சியான ஆட்டம் கால்பந்தாட்டமாகும். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, ஆட்டத்தில் தானும் பங்கு பெற்று ஆடுவது போன்ற உணர்வினை எழுப்பி, முன்புறமாகக் கால்களை தன்னையறியாமலே உந்தித்தள்ளும் வகையில் உற்சாகம் ஊட்டக் கூடிய ஒர் அற்புதமான

ஆட்டமும் ஆகும்.

எங்கெல்லாம் மனித இனம் ஆதிகாலத்தில் இருந்ததோ, அங்கெல்லாம் இந்த மாதிரி ஆட்டம் இருந்திருக்கிறது. ஏனென்றால், கீழே கிடக்கும் ஒரு பொருளை எத்தித்தள்ளி மகிழும் பழக்கம் எல்லா வயதினரிடத்தும் இயல்பாகவே இன்றும் அமைந்திருக்கின்றனவே!

இது ஒரு இயற்கையான இயல்பூக்கமாகும். உவகை *சிந்த உணர்வும் ஆகும். இத்தகைய உணர்வு மிக்க விளையாட்டு எல்லா நாட்டிலும் ஏதோ ஒரு வகையில், எப்படியோ ஒரு நிலையில் ஆடப்பட்டதாக வரலாற்றுக்கும் அப்பாற்பட்ட, உட்பட்ட சான்றுகளால் அறிய முடிகின்றது.