பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

களிப்பதுமாக புது ஆட்டம் தன் வளர்ச்சியைத் தொடங் கியது. இவ்வாறு தன்னை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவர் களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காமல், இனிமையையும் கணிவையும் காட்டித் தன்னுடைய தோற்றத்தை 1895ஆம் ஆண்டு அவனியில் பெற்றது கைப்பந்தாட்டம். தந்தை மோர்கன் தன் உழைப்பின் பயனுய் விளைந்த உன்னத படைப்பைக் கண்டு களித்தார். ஆனந்தக் கடலில் குளித்தார். இன்று உலக முழுவதும் கைப்பந்தாட்டம்’ என்று பரவியிருக்கும் இந்த ஆட்டத்திற்கு, அன்று ‘மின்டானட் (Mintonneth) என்ற அன்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். பிறந்த குழந்தை நோய் நொடியின்றி வளமாகவே வளர்ந்து விடமுடியுமோ? குழந்தையாக தோன்றியிருக்கும் (கைப்பந்தாட்டம்) மின்டானெட் மட்டும் இதற்கு விதி விலக்கா? தடைகளையும் துயர்களையும் தாண்டி மின்டானெட்’ எவ்வாறு வளர்ந்தது என்று இனி காண்போம்.

வளர்ச்சி

எளிமையான சில விதிகளை (Rules) அடிப்படையாகக் கொண்டு ஆட்டம் தன் பணிப் பயணத்தைத் தொடங்கியது. குழு ஒன்றுக்கு 20 அல்லது 30 பேர்களுக்கு மேல் சேர்ந்து விளையாடினர். ஒரு தடவை காற்றடித்த தோல் பையான பந்தை, வலைக்கு மறுபுறம் அனுப்ப, ஒரு குழுவினர் எத்தனை முறை வேண்டுமானுலும் தொட்டுத் தள்ளலாம்’ (Touch) என்ற விதி இருந்ததால், ஆட்டக் காரர்கள் அயர்வின்றி ஆடினர். தேவை நிறை வேறியது என்ற ஒரு திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டாலும், தீராத மனக்குறையானது ஒன்று இருக்கத்தான் செய்தது.