பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 149

அடித்து ஆடும் ஆட்டமே வெகுவாகப் போற்றிப் புகழப் பட்டது. இப்பொழுது அடிப்பதை விட, அடிக்கப்பட்ட பந்தை எடுத்து ஆடும் (Defensive Play) ஆட்டமே சிறப் பாகத் தோற்றமளிக்கிறது.

அடிப்பதை நேராக விட்டு விட்டு எடுத்தாட முயல்வதை விட, அடிக்கும் இடமாகிய வலைக்கு மேலே முட்டுக்கட்டை போடுவது போலத் தடுத்து விடுவது நல்லதல்லவா! தடுப்பையும் மீறி, பந்து வந்தால் மற்றவர்கள் எளிதாக எடுத்துத் தருவதற்கும் வாய்ப்பிருக் கிறது.

ஒருவர் அடிக்கும் பொழுது எதிர்க் குழுவினர் வலைக்கு மேலே தடுப்பதற்காகக் கைகளை உயர்த்தினால், அதனல் பலனுண்டு, அடிப்பவருக்குத் தடுப்பைக் கண்டதும் சிறிது துணிவு குறைகிறது. அதனல் தடுமாற்றம் ஏற்பட வழியாகிறது. இன்னும் திண்ணமாக அடித்து முடித்து விடலாம் என்ற துணிவில் சிறிது குறைவதால், அடிப்பதில் வலிமை குறைகிறது. மு.மு வேகமும் காட்ட முடியாமல் போகிறது.

பிறகு, பந்தை அந்தப் பக்கம் எப்படியேனும் அடித்து அனுப்பி விட்டால் போதும் என்ற நிலைமையும் ஏற்படுகிறது. முதல் முறை நன்கு அவரை அடிக்க முடியாது தடுத்து விட்டால், அடிப்பவருக்கு ஏற்படும் பயத்தால் அடிக்கப்படும் பந்து வலையிலோ அல்லது ஆடுகளத்திற்கு வெளியே தான் போய் விழும். இவ்வாறு அடிக்க ஒருவர் தாவவும், இருவரோ மூவரோ தடுக்க முயலவும், அவர்களின் உற்சாகமான போட்டியில்ை பந்துக்காகத் தாவும் காட்சி, பார்வையாளர்களுக்குப் பெரும் காட்சி விருந்தாகவும் அமைந்து விடுகிறது.

இத்தகைய தடுக்கும் முறை, 1938ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேசீயக் கைப்பந்தாட்டப்