பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கிரேக்கரால் (Greeks) அறிந்திருக்கக் கூடும் எனவும் நம்பப் படுகிறது.

பழங் கிரேக்கக் கலைகளிலும் எகிப்தியரின் சித்திர எழுத்து முறையிலும் (Hieroglypics), வளைகோல் பந்தாட்டத்தைப் போல் உருவ முறைகள் அமைக்கப் பட்டு இருப்பதாகவும் தெரிய வருகின்றது. தெமிஸ்டாகிளிஸ் (Themistocles - 514 - 499) என்பவரால் கட்டி முடிக்கப் பட்டு இப்பொழுது உலகுக்குக் கிடைத்திருக்கும் அரை குறை முனைப்போவியத்தில்’ (Bas Relief) உள்ள படம் ஒன்றில், ஆறு இளைஞர்கள் வளைகோல் பந்தாட்டம் போன்றதொரு விளையாட்டில் ஈடுபட்டிருக்க, அதில் இருவர் எந்த முறையிலும் சேராத புல்லி (Bully) ஒன்றை எடுப்பதற்காக நின்று கொண்டிருக்கின்றனர்”, என்ற முறையில் காணப்படுகிறது என்பது ஒரு சாராரின் கருத்து, இதே கருத்தை வலியுறுத்திக் கூறுகின்ற மற்றாெரு சாரார் இதன் காலத்தைக் கி. மு. 460 ஆம் ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆட்டம் அயர்லாந்து நாட்டுக்கு (reland உரிமையென்றும், இதன் தோற்றம் இங்கேதான் இருந்தது என்றும் கூறி பெருமை பாராட்டுகிறார் ஈஸ்டசு ஒயிட்” (Eustace White) என்பவர். வளைகோல் பந்தாட்டத்தைப் பற்றிக் குறிக்கின்ற ஒரு சில குறிப்புகளும் அயர்லாந்தே இந்த ஆட்டத்தின் தாயகம்’ என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த ஆட்டம் எப்படியேனும் எந்த முறையிலேனும் பிறந்திருக்கலாம். மனித இனத்தின் வரலாறு போன்று பழமை மிகுந்த ஆட்டத்தை, ஒரு பந்தையும் பல கோல்களையும் வைத்துக் கொண்டு ஆடியுமிருக்கலாம். வேறு பட்ட துறையிலே, வேறு பட்ட முறையிலே, வேறு பட்ட சூழ்நிலையிலே வாழ்ந்திருந்த நம் முற்கால முன்னோடிகளால்