பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 43.

நிலைப்பந்தை (Dead ball) உதைப்பதற்கும், இடை இடையே கிடைக்கும் தனியுதை (Free-kick)போன்றவற்றை சிறப்பாக செய்வதற்கும், பழக்கமும் பயிற்சியும் அதிகம் வேண்டும். உதைக்கும் நிலையிலேயே எல்லா முறையும் பந்து நம்மிடம் வராது. வேறு பல நிலைகளிலும் வரும். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகமிக அவசிய மாகும்.

தரையோடு தரையாக உருண்டு வரும் பந்தையும் (Ground ball); சற்று மேலே உயர்ந்து வரும் பந்தையும் (Ball in the air), வருகிற பந்தை நிறுத்தாமல் உதைத்தாடும் நிலையும், நிறுத்தி வைக்கின்ற திறனும் ஆட்டத்திற்குச் சிறப்பை அளிக்கக் கூடியதாகும்.