பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

கடைப் பந்தாட்டம்

ஆடும் முறை

ஐந்து ஆட்டக்காரர்கள் சேர்ந்தது ஒரு குழுவாகும். (Team) ஒரு குழு தன் எதிர்க்குழுவுக்கு உரிமையான வளையத் தினுள் (எதிர்பக்கம் அமைந்த வளையம்) பந்தை எறிய முயல் வதும்; எதிர்க்குழு அவர்களை வளையத்திற்குள் எறியவிடாது தடுத்து, தாங்கள் அடுத்தவர்களுடைய வளையத்தினுள்’ பந்தை எறிய முயல்வதும்தான் ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆட்டத் தொடக்கத்தில் இரு குழுவில் உன்ள ஆட்டக் காரர்கள் அனைவரும் தங்களுக்குரிய இடங்களில் நின்று கொண்டிருப்பார்கள். ஆடுகளத்தின் மைய வட்டத்தின் உள்ளே (Centre Circle) முன்னுட்டக்காரர்கள் இருவர் (குழுவுக்கு ஒருவராக) (Centre Forwards) எதிரெதிராக நின்று கொண்டிருக்க; நடுவர் அவர்களுடைய கைகளுக்கு எட்டாத அளவு உயரத்தில் பந்தை மேலாக எறிந்து ஆட்டத்தைத் துவக்கி வைப்பார். இதற்குப் பந்துக்குத் தாவுதல்’ (jump ball) என்று பெயர். உயரே எறிந்த பந்தைத் தன் குழுவினரிடம் தள்ளி சேர்க்க இருவரும் தாவிக் குதித்து முயற்சி செய்வார்.

கையில் பந்தை வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர், எதிர்க் குழுவினர் காத்து நிற்கின்ற வளையத்திற்கருகே சென்று, பந்தை எறியவே முயற்சி செய்வார். அதற்காக அவர் பந்தைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்கவோ, ஒடவோ முடியாது. அப்படிச் செய்வதும் கூடாது. அவர் பந்தைத் தரையில் தட்டிக் கொண்டே ஒடலாம். (Dribbling). அவ்வாறு அவர் ஒடும் பொழுது, ஒரு தப்படி (Step) வைக்கும் நேரத்தில் தான் கையைப் பந்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு முறை பந்தைக் கையால் பிடித்து தரையிலே தட்டிக் கொண்டு ஒட ஆரம்பித்து, பிறகு பந்துடன் நின்று