பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஒரு ஆட்டக்காரர் மேல், பலர் சேர்ந்து கொண்டு இடித்துத் தவறிழைப்பார்கள் (Multiple Contact). எத்தனை பேர் இந்தத் தவறில் ஈடுபட்டாலும் அத்தனே பேருக்கும் தனியார் குற்றம் தரப்படுகிறது. அத்தனை முறை தனி எறி வாய்ப்பும் தரப்படுகிறது. இரண்டு எதிர்க் குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் இணைந்தாற் போல் தவறு செய்யும் பொழுதும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தனிநிலைத் தவறு தரப்படுகிறது.

இரண்டாவது பகுதியின் கடைசி 5 நிமிடத்தில் நிகழும் எந்த விதமான தவறுகளுக்கும் (Fouls) தண்டனையாக, “தனி எறி இரண்டு முறை தரப்படுகிறது. தனி எறி எறியும் போது மற்றவர் தவறு செய்தால் வளையத்திற்குள் பந்து நுழைந்து விழுந்தால், வெற்றி எண் கிடைக்கும்.

அப்படி விழாவிட்டாலும், மீண்டும் தனி எறிக்கு வாய்ப்புத் தரப்படும். தன் குழுவினரே தனி எறி எறியும் போது தவறு செய்தால், அதற்குத் தண்டனையாக பக்கக் கோட்டின் வெளியிலிருந்து எதிர்க் குழுவினர் பந்தை உள்ளெறிதலைச் செய்வார்.

நடுவரின் குழலொலிக்குப் பிறகுதான், எப்பொழுதும் தனி.எறி நடைபெற வேண்டும். பெருந்தன்மை நீங்கிய (Un sportsmanlike qualities) பண்பற்ற செயல்களான எவ்லாத் தவறுகளுக்கும், அந்தப் பொறுப்பான ஆட்டக் காரர் ஆட்டத்தில் தொடர்ந்து ஆட முடியாதவாறு நீக்கப் படுவார்.

95.0551 (5139153,5155i (Techniques)

கூடைப் பந்தாட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராகத் திகழ, திறமையும், திண்மையான உடலும், குறி நோக்கும், கற்கும் நிலைகளில் முயற்சியும், நலம் தேடுகின்ற உள்ளமும்