பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பியா | - டுக்க onl lன் விதிகள்

(_) ஒவ்வொரு முறை ஆட்டம் முடிந்த பிறகு குழுக்கள் பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் இவர் அறிவிக்க வேண்டும்.

4. GsmG) smLum smrfir (Linesman)

நடுவருக்கு உதவ, குறைந்தது 2 கோடு காப்பாளர்கள் (Line Referee) எதிரெதிர்ப் பக்கமாவது (Diagonally) (அதாவது மூலை விட்டமாக) இன்னும் அடித்தெறியும் பக்கத்திலுள்ள முனை களிலாவது இருக்க இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் அமர்ந்திருக்க வேண்டிய இடம் உள்ளாடும் அரங்கமாக இருந்தால் ஆடுகளக் கோட்டிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரமும், வெளியாடும் அரங்கமாக இருந்தால் மூன்று மீட்டர் தூரமும் இருக்க வேண்டும்.

இவர்கள் நடுவரின் ஆணைக்கடங்கிப் பணியாற்றுவார்கள். ஆடுகளத்திற்கு வெளியே பந்து விழும்பொழுதும் கைகளை உயர்த்தியும், உள்ளே விழும்போது கைகளைக் கீழே தாழ்த்தியும் காட்டுவார்கள்.

ஆடுகளத்திற்கு வெளியே பந்து சென்றால், அதை சைகை மூலம் காட்டும்படி இவர்களை நடுவர் கேட்கலாம். பந்தைப் பெறுகின்ற குழுவில், முன்னதாகப் பந்தைத் தொட்டாடிய ஆட்டக்காரர் யாரென்பதையும் கேட்கலாம். அடித்தெறியும் ஆட்டக்காரர் அடித்தெறியும் பொழுது இழைக்கின்ற தவறுகளையும், வலையிலுள்ள பக்க நாடாக்களுக்கு வெளியே பந்து செல்வதையும் நடுவரின் கவனத்திற்கு கோடு காப்பாளர்கள் கொண்டு வருவார்கள்.