பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 விளையாட்டுக்களின் விதிகள்

இரு குழுத்தலைவர்களும் இணங்கி ஒத்துக் கொண்டாலொழிய, எந்த நிலையிலும் இடைவேளை நேரம் 10 நிமிடங்களுக்கு மேல் போகக்

கூடாது.

பின் தள்ளல் மூலம் (Pass Back), நடுவர் விசில் மூலம் அனுமதி கொடுத்தவுடன் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது.

4. விளையாடும் முறைகள் (Conduct of Play)

1. கோலின் (Stick) முன்பாகத்தால் மட்டுமே பந்தை விளையாட வேண்டும். தன்னுடைய கையில் சொந்தமாகக் கோல் இன்றி எந்த ஆட்டக்காரரும் ஆட்டத்தில் பங்குபெறவோஅல்லது இடை புகவோ கூடாது.

தனி அடி, ஒறுநிலை முனை அடி, ஒறுநிலை அடி அடிப்பதற்காக, வேறு ஒரு கோலை மாற்றிக் கொள்ளக்கூடாது.

2. பந்தை அடிக்க அணுகுகிற பொழுதோ, ஆட முயல்கின்ற பொழுதோ, ஆடிக் கொண்டிருக்கின்றபொழுதோ, அல்லது பந்தை நிறுத்துகின்ற பொழுதோ, தனது தலை உயரத்திற்கு முன்போஅல்லது பந்தை அடித்ததற்குப் பின்போ உயர்த்தப்படக் கூடாது.

3.அபாயம் விளைவிக்கின்றதன்மையில் அல்லது அபாயத்திற்கு வழி நடத்துகின்றதுபோல் எதிராளியை முரட்டுத்தனமாக அடித்துத் தாக்குவதோ அல்லது ஆடுவதோ அல்லது பந்தை முரட்டுத்தனமாக உதைப்பதோ போன்ற முறையில் விளையாடக்கூடாது. ஒரு ஆட்டக்காரர் தோள் பகுதிக்கு மேலே உயர்ந்து போகுமாறு பந்தை அடித்தாடக் கூடாது. அபாயம் விளைவிப்பது போல் தன்னை நோக்கி வருகிற பந்தைக் கையால் தடுக்கலாம்.

4. தரையில் உள்ள அல்லது தரைக்கு மேலே இருந்து வருகிற பந்தைத் தடுக்க அல்லது ஒருபுறமாகத் திருப்பி ஆட முயலும்போது, தனது உடலின் ஏதாவது ஒரு பகுதியையோ அல்லது தனது பாகங்களின் உதவியைக் கொண்டோ ஆடுவது கூடாது.

- 5. கோலால் செய்வதன்றி, மற்ற எந்த முறையிலேனும் பந்தைப் பொறுக்குவதோ, உதைப்பதோ, எறிவதோ, ஏந்துவதோ அல்லது தள்ளுவதோ கூடாது.

6. எதிராளியினது கோலுடன் வேகமாக அடித்தலோ, கொக்கி

போட்டு இழுத்தலோ, பிடித்தலோ, அடித்தலோ அல்லது தடை செய்தலோ கூடாது. -