பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | || விளையாட்டுக்களின் விதிகள் *Eo

இலக்கு வட்டத்திலிருந்து எடுக்கப்படுகின்ற ‘மேல் எறி”யிலிருந்து வருகின்ற பந்தை, இலக்குள் எறிபவர் அல்லது இலக்கினைத்தாக்குபவர் நேராகப் பெற்று இலக்குள் எறிந்து, வெற்றி எண் பெறலாம்.

மேல் எறி எடுக்கப்படுகின்ற இடமும் சூழ்நிலையும்:

எந்த இடத்தில் முன்னர் விவரித்தத்தவறுகளில் ஏதாவது ஒன்று

நிகழ்ந்ததோ அந்த இடத்திலிருந்து (முடிந்தவரை அதேஇடத்தைக் கண்டுபிடித்து) அல்லது அருகேயுள்ள இடத்திலிருந்து, சம்பந்தப் பட்ட இரு ஆட்டக்காரர்களிடையே, மேல் எறி எறிவதை நிகழ்த்த வேண்டும்.

இரு திடலுக்குள்ளும் அருகருகே இருப்பது போன்ற பகுதி யிலேயுள்ள இரண்டு ஆட்டக்காரர்கள் இதில் சம்மந்தப்பட்டிருந்தால், இலக்குப் பரப்பின் சற்று முன்னதாக, அந்த பரப்பெல்லைக்குள் ஆடும் உரிமை பெற்ற எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்களுக்கிடையே, மேல் எறி நிகழ்த்தப்படவேண்டும். 5. தனி எறி வழங்கல்

- ஆட்டக்காரரை இடித்து ஆடுதல் (Contact) அல்லது இடையூறுவிளைக்கும் தடுத்தாடுதல் (Obstruction) போன்ற குற்றங்களைத் தவிர, மற்ற எல்லா விதி மீறல்களுக்கும், தனி எறி எடுக்கின்ற வாய்ப்பினை தவறிழைத்தவரின் எதிர்க் குழுவினருக்குக் கொடுக்கப்படுகிறது. - .

(இடித்தாடல் அல்லது இடையூறு விளைத்துத் தடுத்தாடல் போன்ற குற்றங்களின் முக்கியத்துவத்தை ஆறாம் பகுதியில் காண்க.)

- அவ்வாறு எதிர்க் குழுவினர் பெறுகிற தனிஎறி எறிதலை எடுக்கும்போது, ஒரு சில விதிமுறைகளைக் கவனிக்க வேண்டும்.

தனி.எறி எறிதல் எடுக்கப்படுகிறபொழுது:

அந்த பரப்பெல்லைக்குள் ஆடும் உரிமை பெற்ற ஆட்டக்காரரில் யாராவது ஒருவர்தான், தனி எறி எறிதலை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு வழங்கி ஆடுபவர், தான் விரும்பும் யாருக்கேனும் பந்தை வழங்கலாம். ஆனால், அந்த ஆடும் பரப்பெல்லைத் திடலுக்குள்ளே (Third) தான் எறிந்து வழங்கலாம். அடுத்தத் திடலுக்குள் எறிந்து வழங்குதல் கூடாது. அது விதிமீறிய செயலாகும். * .