பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 விளையாட்டுக்களின் விதிகள் “

2. பந்தை இலக்குள் எறியும் முறைகள்

o பந்தைத் தன் பாங்கிற்கு (Team mate) எறிவதற்கு முன்னும்,

இலக்குள் எறிவதற்கு முன்னும், பந்தை எவ்வாறு பிடிப்பது என்று முதலில் காண்போம். அவ்வாறு பந்தைப் பிடிக்கும்போது, கால்களின் நிற்கும் நிலை (Position) எப்படி அமைந்திருக்க வேண்டும் என்ற விவ்ர்ங்களை இந்தப் பகுதியில் காண்போம்.

1. ஒரு ஆட்டக்காரர் பந்தைப் பிடிக்கும்போது, ஒரு கால் தரையில் இருந்தால், அல்லது உயரே தாவிக் குதித்துப் பந்தைப் பிடித்து, பிறகு கீழே குதிக்கும்போது, ஒரு கால் தரையில் படும்படி குதித்த பிறகு .

(அ) எந்தத் திசைப் பக்கமேனும் அவர், தனது மறுகாலை தரையில் ஊன்றலாம். அதன்பின், குதித்த பிறகு முதலில் தரையில் ஊன்றிய காலை, உயர்த்திப் பந்தை எறியலாம். அல்லது பந்தை இலக்கை நோக்கிக் குறிபார்த்து எறியலாம். ஆனால், உயர்த்திய அந்தக் காலானது மீண்டும் தரையைத் தொடுவதற்குள்ளாக, பந்து எறிதலைச்செய்திருக்க வேண்டும்.

(ஆ) முன்னது போன்ற நிலை, கீழே குதித்து ஒரு காலை தரையில் ஊன்றியபின், மறுகாலை எந்தத் திசைப்பக்கமாகவேனும் தரையில் வைத்த பிறகு, முதலில் ஊன்றிய காலை (Landing leg) நிலைக் காலாக (pivot) வைத்துக் கொண்டு, பின்னால் ஊன்றிய காலை, ஏந்தத் திசைப் பக்கம் வேண்டுமோ, அந்தப் பக்கமாக மாற்றி மாற்றி, எத்தனை முறை வேண்டுமானாலும் வைத்து ஆடலாம்.

நிலைக் காலாகப் பயன்படுகின்ற கால் இருக்கும் வரைதான், மறுகாலை மாற்றி வைக்கலாம். அல்லாமல் அந்த நிலைக் காலை தரையில் இருந்து தூக்கி அந்தக் கால் மீண்டும் தரையைத் தொடுவதற்குமுன், ஒன்று - பந்தை எறிந்து வழங்க வேண்டும். அல்லது இலக்கை நோக்கி பந்தைக் குறிபார்த்து எறிய வேண்டும் (Throw or shoot). -

(இ) உயரே குதித்துப் பந்தைப் பிடித்த பிறகு தரையில் ஊன்றிய கால், நிலைக்காலாகிவிடும். அதனைத் தூக்கி மீண்டும் குதித்து விளையாட வேண்டும் என்ற நிலை வந்தால், உயரே தாவிக் குதிக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு கால்தரையைத் தொடுவதற்குள், ஒன்று பந்தை எறிந்து வழங்க வேண்டும். அல்லது பந்தை இலக்கை நோக்கிக் குறிபார்த்து எறிய வேண்டும்.

(ஈ) ஊன்றிய கால், நிலைக்கால் என்று முன் கூறிய முறையில், பந்தைப் பிடித்திருக்கும் பொழுது, ஒரு காலை ஊன்றி, அதாவது