பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 215

(5) உட்காரும் கட்டம்: ஒவ்வொரு கடைக் கோட்டிலிருந்தும் 2 மீட்டருக்கு அப்பால் உட்காரும் இடம் (Sitting Block) வைக்கப்பட்டு இருக்க வேண்டும். * . - -

ஆண்கள் உட்காரும் இடம் 8 மீட்டர் 1மீட்டராகவும், பெண் அல்லது 50 கிலோ கிராம் எடைக்குக் குறைந்தவர்களுக்கு 6 x 1 மீட்டராகவும் இருக்க வேண்டும்.

இதுபோன்ற வசதியான உட்காரும் இடம் அமைக்க

முடியாதபொழுது, தகுந்தாற்போல் தங்கும் இடத்தை (Waiting Block) அமைப்பது பற்றி, நடுவர் முடிவு செய்வார்.

குறிப்பு: கடைக் கோடுகளுக்கும், பக்கக் கோடுகளுக்கும் இடையே 4 மீட்டர் தூரத்திற்கு மேல் தாராளமாகப் புழங்க, இடமிருக்க வேண்டும். - - -

2. ஆடுகளம் பற்றிய விளக்கங்கள்

1. ஆடுகளம்: ஆடுகளம் என்பது. சிறந்த சமதளத் தரைப் பகுதியாக இருந்து, 12.50 x 10 மீட்டர் என ஆண்களுக்கும், 8 மீட்டர் என்று பெண்களுக்கும், 50 கிலோ கிராம் எடைக்கும் குறைந்த ஆண்களுக்குமாகப் பயன்படுத்துவதாக அமைந்திருப்பதாகும்.

ஆடுகளத் தரையானது, மண், உரம் மற்றும் மரத்துள்

போன்றவற்றினால் அமையப்பெற்றிருப்பது சாலச்சிறந்ததாகும்.

2. oGifill th (Play-field): பொதுவாக, ஆடுகளம் என்பது ஆண்களுக்குரிய ஆட்டமாக இருந்தால், 12.50 மீட்டர் x 8 மீட்டர் என்றும், 50 கிலோ கிராம் எடைக்குக் குறைந்த ஆண்களுக்குரிய ஆட்டமாக இருந்தால் 11 மீட்டர் x 6 மீட்டர் என்றும் இருக்கும். போராட்டம் (Struggle) தொடங்கியவுடனேயே, ஒவ்வொரு மீட்டர் தூரமுள்ள தொடரிடங்களும் ஆடுமிடமாக மாறிவிடும்.

3. நடுக்கோடு:ஆடுகளத்தை இருசமபகுதியாகப் பிரிப்பதால், அது நடுக்கோடு (Mid-Line, March-Line) எனப் பெயர் பெறுகிறது.

4. பகுதி: நடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆடுகளம், ஒவ்வொன்றும் ஒரு பகுதியாக (Court) மாறுகிறது.

5. பாடிச் செல்வோர் தொடும் கோடு: நடுக் கோட்டுக்கு நேர் இணையாக, ஒவ்வொரு பகுதியிலும் 3.25 மீட்டர் தூரத்தில் பாடிச் செல்வோர் தொடும் கோடு (Baulk Line) ஒன்று குறிக்கப் பட்டுள்ளது. (பெண்களுக்கும் 57 கிலோ கிராம் எடைக்குக் குறைந்த ஆண்களுக்கும், 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் வேண்டியதுரம் 2.25 மீட்டராகும்.) :