பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.ந்வராஜ் செல்லையா 231

தொடும்பொழுது சுத்தமாகவும் தெளிவாகவும் ‘கோ’ சொல்வதையே சரியான முறையென்பர். -

குறிப்பு: ஆளைத்தொடுவதும் “கோ என்று சொல்வதும் ஒன்றாகவே இருக்க வேண்டும். ‘கோ’ சொல்வது தாமதமாகவோ, அல்லது ஆளைத் தொடுவது நேரம் கழித்தோ நடைபெற்றால், அது தவறாகும். கோ சொல்லிவிட்டு ஆளைத் தொடாமல் இருப்பதும், ஆளைத்தொட்டு விட்டுக் கோ சொல்லாமல் இருப்பதும், தவறாகும். -- -

12. தவறு உட்கார்ந்திருக்கும் விரட்டுவோன் அல்லது ஓடி விரட்டுவோன் யாராயினும் சரி, எந்த விதியை மீறினாலும் அது தவறென்றே கொள்ளப்படும். அந்தத் தவறு சுட்டிக்காட்டப் படுவதற்காகவும், உடனே திருத்தியமைக்கப்படுவதற்காகவும், குறைவான விசில் (Shortwhistle) சத்தத்தால் குறிகாட்டப்படும்.

13. திசை கொள்ளல் ஒரு கம்பத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்வதைத்தான் திசைக் கொள்ளல் (Totalea Direction) என்கிறோம்.

14. முகத்தைத் திருப்புதல்: ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடி விரட்டுவோன், அவரது தோள்மட்ட நிலையை நேர்க்கோண அளவுக்கு மேலாகத் திருப்பிவிட்டால், (தோள்மட்ட நிலை என்பதைக் கற்பனைக் கோட்டால் கண்டு கொள்ள) அவர் முகத்தைத் திருப்பியதாகக் (To trunthetace) கருதப்பட்டு, தவறு என்று குற்றஞ்சாட்டப்படுவார்.

15. பின் வாங்குதல்: ஒரு குறிப்பிட்டத் திசையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடி விரட்டுவோன், உடனே எதிர்த்திசையில் திரும்பி ஓடினால், அவர் பின் வாங்குகிறார் (to recede) என்று கருதப்படும். அத்தகைய செயல் தவறு எனக் கொள்ளப்படும்.

16. கம்பக் கோட்டைக் கடந்து விடுதல் ஓடி விரட்டுகிற ஒருவர் கம்பத்தை பிடித்துக் கொண்டிருக்கும் பிடியை அல்லது தொட்டுக்கொண்டிருக்கிற நிலையை விட்டாலும், அல்லது நீண்ட சதுரத்தைவிட்டு அதற்கப்பால் சென்றாலும், அவர்கம்பக்கோட்டைக் கடந்து சென்றார் (to leave the post) என்றே கொள்ளபப்டும்.

17. வெளியே கால் படுதல்: ஒட்டக்காரருடைய இரண்டு கால்களும் ஆடுகள எல்லைக்கு வெளியேயுள்ள தரையைத் தொட்டால் அவர் வெளியே கால்களை வைத்ததாகக் (Foot out) கருதப்பட்டு ஆடுவதிலிருந்து வெளியேற்றப்படுவார் (Out).