பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

co- டாக்டர் எஸ்.நவராத் செல்லையா - 243

1. ஆடுகளத்தின் அமைப்பு off sopuff oil-Lib (Singles Game) -

1. ஆடுகளத்தின் நீளம் 23.77 மீட்டர் (78 அடி), அகலம் 8.23 மீட்டர் (27 அடி). நடுவிலே கட்டப்பட்டிருக்கிற ஒரு வலையினால், ஆடுகளம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வலையானது, கெட்டியான கயிற்றால் அல்லது இரும்புக்கம்பியால், (கம்பியின் விட்டம் 0.8 சென்டி மீட்டர்) வலையின் இருபுறமும் ஊன்றப்பட்டிருக்கும் 1.07 மீட்டர் (3அடிeஅங்குலம்) உயரம் உள்ள கம்பத்தில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.

ஆடுகளத்தின் மையப் பகுதியில், வலையின் உயரம் 0.914 மீட்டர் (3அடி) கட்டியிருக்கும் வலையின், சிறு பின்னலுக்குள் பந்து நுழைந்து செல்லாதவாறு சிறு துவாரத்துடன் வலை அமைந்திருக்க வேண்டும். கம்பத்திற்கும் பக்கக் கோட்டிற்கும் இடையில் பந்து வலைக்குக் கீழ் சென்று விடாமல் இருக்க, வலையானது, கம்பம் வரையிலும் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும்.

ஆடுகளத்தின் நடுப்பகுதியில் 3 அடி உயரத்தில் வலை இருப்பதுபோல கட்டிவிட அதன் மையத்தில் 2 அங்குலம் (5 சென்டி மீட்டர்) அகலமுள்ள வெள்ளை நாடாவால், வலை மேலிருந்து, தரையில் பதித்துள்ள இரும்பாணியில் இணைத்து, இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். வலையின் மேற்புறத்திலும் 5 சென்டி மீட்டர் முதல் 6.3 சென்டி மீட்டர் வரை (2 அங்குலம் முதல் 2% அங்குலம் வரை) அகலமுள்ள வெள்ளைப் பட்டை நாடாவும் கட்டியிருக்க வேண்டும். வலையில், வலைப்பட்டையில் மற்றும் எந்தப் பகுதியிலும் எந்த விதமான விளம்பர வாசகங்களோ படங்களோ இல்லாமல் இருக்க வேண்டும். - டென்னிஸ் ஆட்ட - ஆடுகளம் -

ஆடுகளத்தின் கடைசி எல்லையைக் குறிக்கும் கோடுகள் கடைக்கோடுகள் என்றும் (Base Lines) பக்க எல்லையைக் குறிக்கும் கோடுகள் பக்கக் கோடுகள் (Sidelines) என்றும் அழைக்கப்படும்.

வலையிலிருந்து அமைந்திருக்கிற ஒவ்வொரு ஆடுகளப் பகுதியிலும் 6.40 மீட்டர் (21அடி) நீளத்திற்கு இணையான கோடு ஒன்று குறிக்கப்படும். அந்தக் கோடானது சர்வீஸ் கோடு (Service line) ஆகும். அந்தக் கோட்டிலிருந்து வலை வர்ைக்கும் ஆடுகளப் பகுதியை இருபிரிவாகப் பிரிக்கின்ற மையக்கோடு5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) அகலத்தில் பிரிப்பதால், அங்கே இரண்டு ஆடுகளப்