பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 விளையாட்டுக்களின் விதிகள் *ES

1. ஆடுகள மேசையும், உதவி சாதனங்களும் 1. ஒற்றையர் (singles Game) 1. மேசை (Table)

மேசைப் பந்தாட்டத்தின் ஆடுகளமான மேசை - செவ்வக

வடிவம் உள்ளது. மேசையின் நீளம் 9 அடி (274 சென்டி மீட்டர்) அகலம் 5 அடி. (152 சென்டி மீட்டர்). மேசையின் உயரம் தரையிலிருந்து 2% அடி (76 சென்டிமீட்டர்) அது படுக்கை வசமாக நிறுத்தப்பட்டிருக்கும். -

மேசையானது விதிக்குட்பட்ட, பொருத்தமான மரத்தால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். மேசை மீது எங்கு பந்து விழுந்தாலும், ஒரேமாதிரி எம்பிக்குதிக்கும்தன்மையுடையதாகமேற்பரப்பு அமைய வேண்டும். 12 அங்குலம் உயரத்திலிருந்து பந்தை மேசை மீது விழச் செய்கிறபோது, பந்தின் துள்ளல் 8 அங்குலம் முதல் 9 அங்குலம் உயரம் உயர்ந்து மேலெழுவது போன்ற தன்மையில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும்.

5 அடிஅகலத்தில் உள்ள மேசையில் குறிக்கப்பட்டிருக்கின்ற கோடுகளுக்கு கடைக்கோடுகள் (Endines) என்றும், 9 அடிநீளத்தில் குறிக்கப்பட்டிருக்கின்ற கோடுகளுக்கு பக்கக் கோடுகள் (Sidelines) என்றும் பெயர். - - 2. வலையும் அதற்குரிய தாங்கிகளும்

(The Net and its Supports)

மேசையின் மொத்த நீளமான 9 அடியில் அமைந்த ஆடுகளமானது, 4% அடி தூரத்தில் உள்ள மையப் பகுதியில் ஒரு வலையைக் கட்டி, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆக, சரியாகப் பிரிந்த ஒரு ஆடுகளப் பகுதியின் அளவு 4% அடி நீளம். 5 அடி அகலம் ஆகும்.

வலையின் மொத்த நீளம் 6 அடி, மேசைப் பரப்பிலிருந்து கட்டப்படும் வலையின் உயரம் 6 அங்குலம் (15.25 சென்டிமீட்டர்). மேசையின் அகலப் பகுதியில் அதாவது நடு மையத்தில் அமைகிற வலையை, இழுத்துக்கட்டுவதற்காக, இரண்டு தாங்கிகள் இருபுறமும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் உயரம் 6 அங்குலம், பக்கக் கோடுகளுக்கு அப்பால், தாங்கிகள் இருபுறமும் இருந்து, வலையை இழுத்துக் கட்ட உதவுகின்றன. தாங்கிகளை ஒட்டியே, வலையும் இழுத்துக் கட்டப்படவேண்டும்.