பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 267

4. விதிக்குட்பட்டு பந்தை அனுப்பும் முறை (A good return)

சர்வீஸ் செய்யப்பட்ட சர்வீஸ் பந்தை அடித்தாடி திருப்பி அனுப்புகிறபோது, மட்டையினால் அடிக்கப்பட்டு வலைக்கு மேலாக, அல்லது கட்டிய வலைப்பகுதியை சுற்றியும் வந்து, எதிராட்டக்காரர் பகுதியாகிய மேசை மேல் விழுந்தால், அப்படி வந்து விழுகிற பந்தானது வலைக்கு மேலாக வந்தாலும் அல்லது வலையைத் தொட்டுக் கொண்டு வந்து விழுந்தாலும், அது சரியாகத் திருப்பி அனுப்பப்பட்ட பந்து என்றே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. விளையாடும் முறைகள் (The order of play)

1. ஒற்றையர் ஆட்டத்தில் சர்வீஸ் போடுகிறவர் முதலில் பந்தை அடித்தாடி எதிர்மேசைப் பகுதிக்கு அனுப்ப, அதை எதிராட்டக்காரர் எடுத்தாடி மீண்டும் அனுப்ப; இப்படி இரண்டு ஆட்டக்காரர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் பந்தை மாறி மாறி அடித்து அனுப்புகிற முறையே, சரியான விளையாட்டு முறையாகும்.

2. இரட்டையர் ஆட்டத்தில்; சர்வீஸ் போடுபவரின் சர்வீஸ் பந்தை எதிராட்டக்காரர் ஒருவர் திருப்பி ஆடி அனுப்ப; அதை சர்வீஸ் போட்டவரின் பாங்கர் எடுத்தாடி எதிர்ப்பகுதிக்கு அனுப்ப; அதை முதலில் சர்வீஸ் போட்டவர் எடுத்தாடிஅனுப்ப, இப்படியே தொடர்ந்து ஆடுகிற விளையாடும் முறை ஒவ்வொரு வெற்றி எண்ணுக்குமாகத் தொடர்கிறது. பந்து ஆட்டத்தில் உள்ளது (Ball in Play).

சர்வீஸ் போடுவதற்காக உள்ளங்கையில் வைத்து, அடிக்கப்பட்ட பந்தானது, விழ வேண்டிய மேசைப் பகுதியில் விழாமல், வலையைத் தொட்டும் மட்டையைப் பிடித்திருக்கின்ற மணிக்கட்டுப் பகுதிக்கு மேலே உள்ள பகுதியில் பட்டும் இருந்தால், அது சரியான பந்து அல்ல. அப்படி எதுவும் நிகழாதபோதுதான், பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும்.

போடுகிற சர்வீஸ் பந்து, வெற்றி எண்ணைப்பெறுகிறபோதும், வலையைத் தொட்டுவிடுகிற போதும், பந்து ஆட்டத்தில் உள்ளதாக இல்லாமல் போகிறது என்பதும் முக்கியமானதாகும். மீண்டும் விளையாடும் நிலை

1. சர்வீஸ் பந்தானது வலையில் பட்டு, மறுபுறம் விழுந்தால்,