பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to-yo” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 269

8. பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, மட்டையைப் பிடிக்காத ஒரு கையை, விளையாடும் மேசைப் பரப்பின் மேல் தொட்டு விடுகிறபோது; - - -

9. தனது பாங்கர் சர்வீஸ் போடுகிற சமயத்தில், தனது காலைத் தரையில் உதைத்து சத்தம் எழுப்புகிற போது,

10. இரட்டையர் ஆட்டத்தில், தன் பாங்கர் ஆட வேண்டிய பந்தை, தானே ஆடி விடுகிற தவறைச் செய்கிறபோது. -

தவறிழைத்தவர் ஒரு வெற்றி எண்ணை இழக்கிறார். அவரது எதிராட்டக்காரர் ஒரு வெற்றி எண்ணைப் பெறுகிறார். போட்டி ஆட்டத்தில் வெற்றி (Match)

1. ஒரு முறை ஆட்டத்தில் (Game) வெற்றி பெற, ஒரு ஆட்டக்காரர் அல்லது ஒரு அணியானது 2வெற்றி எண்களை எடுக்க வேண்டும். - -

இரண்டு அணிகளும் அல்லது இரண்டு ஆட்டக்காரர்களும் 20-20 என்ற சமநிலையில் இருந்தால், அடுத்தவரை விட முதலில் அதிகமாக 2 வெற்றி எண்கள் எடுக்கிற போதுதான் ஒருமுறை ஆட்டத்தில் வெற்றி பெற முடியும்.

ஒரு போட்டி ஆட்டம் (Match) என்கிற போது, ஒருவர் அல்லது ஒரு அணியானது 3 முறை ஆட்டங்களில் (Games) 2 அல்லது 5. முறை ஆட்டங்களில் 3 ஆட்டங்களை வென்றாக வேண்டும். - 2. tiisii (35rib (Interval) -

போட்டி ஆட்டமானது, ஆட்டக்காரர் ஒருவர் தனக்கு ஓய்வு வேண்டுமென்று கேட்கும் வரை, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். - -

அப்படி பெறப்படுகின்ற ஓய்வுக்குரிய நேரம், முதல் முறை ஆட்டத்திற்கும், இரண்டாம் முறை ஆட்டத்திற்கும் இடையில், இரண்டாம் ஆட்டத்திற்கும் மூன்றாம் முறை ஆட்டத்திற்கும் இடையில் ஒரு நிமிடம் தரப்படும்.

மூன்றாவது நான்காவது முறை ஆட்டங்களுக்கு இடையே 5

நிமிடத்திற்கு அதிகமாகி விடாமல் ஓய்வு நேரம் தரப்படும்

7. ஆடுகளத் தேர்வும் சர்வீஸும் (The choice of serving, Receiving and Ends)

1. சர்வீஸ் போடுவதா, அல்லது பக்கமா என்பதை சீட்டுக் குலுக்கல் (Lot) மூலமே தேர்வு செய்யப்படும்.