பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 விளையாட்டுக்களின் விதிகள் - *E,

காட்டும். இன்னும் நேரே கயிற்றைக் கொண்டுசென்றால் 120 அடி குறி வரும். அதுதான் இரண்டாம் தளம் குறிக்கப்பட வேண்டிய இடமாகும். அதுபோல, மற்ற தளங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. ஆடப் பயன்படும்பொருட்கள் - (Equipment)

1. Lu54. IDLol- (The Bat)

பந்தடிக்கும் மட்டையின் நீளம் 34 அங்குலத்திற்கு (87 செ.மீ.) மிகாமலும், அதன் அதிக அகலப் பகுதியானது 2% அங்குலத்திற்கு மிகாமலும், பாதுகாப்புப் பிடியானது கார்க் அல்லது அதற்கிணையான பொருளால் ஆக்கப்பட்டிருக்கவும் வேண்டும். எடை38 அவுன்சுகள் (1100 கிராம்).

பந்தாடும் மட்டையின் கைப்பிடி நுனியிலிருந்து, 10 அங்குலத்திற்குக் குறையாமல் 15 அங்குலத்திற்கு மேற்படாமல் நாடா சுற்றப்பட்டிருக்க வேண்டும். இதுவே அங்கீகரிக்கப்பட்ட மென்பந்தாட்டப் பந்தடி மட்டையாகும்.

2. Logo (The Ball)

மென்மையான மிருதுவான தன்மையுள்ளதாகத் தைக்கப் பட்டிருக்கும் பந்தின் சுற்றளவு 11’,அங்குலத்திற்குக் குறையாமலும் (30 செ.மீ), 121,அங்குலத்திற்கு (31செ.மீ.) மேற்படாமலும், எடை 6%அவுன்சுக்குக் குறையாமலும் (180 கிராம் முதல்200 கிராம் வரை) 7 அவுன்சுக்கு மிகாமலும் அமைந்திருக்க வேண்டும்.

3. LiogrGib gemih (Home Plate)

ரப்பரால் அல்லது அதற்கிணையான பொருத்தமான பொருளால்

ஆக்கப்பட்டிருக்கும் பந்தடித்தாடும் தளமானது, பஞ்சமுகம் (ஐந்து முகம்) கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும்.

பந்தெறிபவரை நோக்கியுள்ள முனைப்பகுதியின் குறுக்களவு 17 அங்குலம் (45 செ.மீ.) இருக்க வேண்டும். பந்தெறிபவர் நிற்கும் கட்டத்திற்கு இணையாக இருக்கும் பகுதிகள் 8% அங்குல நீளம் (20 செ.மீ.) இருக்க வேண்டும். பிடித்தாடுபவர் நிற்கும் பகுதிகளை நோக்கியுள்ள பகுதி 12 அங்குல நீளம் (30 செ.மீ.) உள்ளதாகக் குறிக்கப்படவேண்டும்.