பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-> டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 285

10. மூன்றாவது ஒட்டக்காரர் ஒருவர் கீழ்க்காணும் முறைகளில் ஆட்டமிழந்து போனால், இன்னொரு ஒட்டக்காரர் பந்தடித்தாடும் தளத்திற்கு ஓடி வந்து சேர்ந்தாலும், அது கணக்கில் ஆட்டக்காரர் ஆட்டமிழப்பதற்குள் எடுக்கின்ற ஓட்டங்களையே சரியான ஓட்டம் என்பது விதிமுறையாகும். *

(அ) பந்தடித்துவிட்டு ஓடியவர் (Batter) முதலாவது தளத்தை அடைவதற்குள் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டால்,

(ஆ) பந்தடித்துவிட்டு ஓடியவர் முதல் தளம் ஓடி சேருகின்ற பொழுது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருக்கும் தள ஒட்டக்காரர் (Base runner) ஒட இடமில்லாமல், கட்டாயமாக ஆட்டமிழந்துவிட்டால்;

(இ) பந்தெறிபவர் தன் கையிலிருந்து பந்தை எறிவதற்கு முன், தள ஓட்டக்காரர் ஒருவர் தன் தளத்தைவிட்டு நீங்கி வந்துவிட்டால், (ஈ) ஓடிவரும் தள ஓட்டக்காரர், இன்னொரு தளத்தை நோக்கிச் செல்லும்போது, தளத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே தொடப்பட்டுவிட்டால்; -

இதற்கிடையில் ஒருவர் ஒடி பந்தடித்தாடும் தளத்தை அடைந்துவிட்டாலும், மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விட்டால், அந்த ஓட்டம் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

(உ) குறிப்பேட்டில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் பந்தடி ஒட்டக்காரர் வரிசைப்படியேதான் பந்தடித்தாட வேண்டும் என்பதுடன், அதே வரிசை முறையில்தான் ஓட்டமும் எடுத்தாக வேண்டும்.

உதாரணமாக, இரண்டாவதாக பந்தடித்தாட வந்தார். தள ஒட்டக்காரராகத் தளம் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவருக்குப் பின்னதாக மூன்றாவதாக பந்தடித்தாட வந்த ஒருவர், மூன்று தளங்களையும் தொட்டுவிட்டு, ஓட்டம் எடுத்துவிடமுடியாது. அவர் ஆட்டமிழக்காமல் இருக்கும்பொழுது, அவருக்குப்பின் வருபவர் முன்னே ஓடி ஒட்டம் எடுத்தாலும், அது கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. -

6. குழுவின் தவறும் நடுவரின் முடிவும் (Forfeited Game)

1. ஒரு குழு குறித்த நேரத்திற்குள் ஆடுகளத்திற்கு வராவிட்டால்;