பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விளையாட்டுக்களின் விதிகள் *ES

ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஆடுகளத்தினுள் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழுவிலுள்ள ஆட்டக்காரர் எண்ணிக்கை, 2 பேருக்கும் குறையுமானால், அத்துடன் ஆட்டம் முடிவுபெறும். இருவருக்கும் குறைவாக உள்ள இந்தக் குழு, வெற்றி எண்களை அதிகமாகப் பெற்றிருந்தாலும் அல்லது வெற்றி எண்களைச் சமமாகப் பெற்றிருந்தாலும், எதிர்க்குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும்.

ஆட்டத்தில் வெற்றி எண் அப்பொழுது 2-0 என மாறும். அக்குழு மறுகுழுவைவிட வெற்றி எண்களில் பின்தங்கியிருந்தால், இயல்பாகவே வெற்றி எதிர்க்குழுவுக்கே போய்ச்சேரும். அப்பொழுது வெற்றி எண்களின் நிலை அந்த நேரத்தில் எவ்வாறு இருந்ததோ அதுவே இறுதிப் பதிவாக மாறும்.

6. solsostuml– losplgo (Refuse to Play)

விளையாட வேண்டும் என்று நடுவர் அறிவுறுத்திய பின்னும் விளையாட மறுக்கின்ற ஒரு குழு, தமது ஆடும் வாய்ப்பை (ஆட்டத்தை) இழந்துவிடும். ஆட்டத்தை இழக்கின்ற அக்குழு வெற்றி எண்களில் மிகுந்திருந்தாலும், ஆட்டத்தை இழக்கும் நேரத்தில் அக்குழுப் பெற்றிருந்த வெற்றி எண்களின் நிலைமாறி இறுதியில் 0-2 என்றும், அக்குழு வெற்றி எண்களில் குறைந்திருந்தால் அதே வெற்றி எண்களும் பதிவாகிவிடும்.

7. oGib G|Both (Playing Time)

கூடைப்பந்தாட்டப் போட்டியானது இருமுறைகளில் விளையாடப்படுகின்றது. ஒரு முறையில் 20 நிமிடங்களைக் கொண்ட 2 அரை ஆட்டங்கள், 10 நிமிட இடைவெளியில் நடத்தப்படுகிறது மற்றொரு முறை, 10 நிமிடங்களைக் கொண்ட4 கால் பாக (Quarters) ஆட்டங்களாக நடத்தப்படுகிறது.

விளையாட்டுப் போட்டியானது, மைதானத்தின் நடுவில், நடுவரால் ஆரம்பித்து வைக்கப்படும். இந்தப் போட்டியில் ஒரு அணியினர் 30 நொடிகளுக்குள், தங்கள் மைதானப் பகுதியிலிருந்து, எதிரியின் மைதானப் பகுதியிலிருக்கும் கூடையில் பந்தைப் போட வேண்டும்.

போட்டியின் இடையே, வீரர்கள் ஓய்வெடுக்கவும், பயிற்சியாளர் விளையாடும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கவும், ஐந்து முறை 1 நிமிடஇடைவேளை அளிக்கப்படுகின்றது. இந்த இடைவேளையை பயிற்சியாளர் நடுவர் மேடையில், தனக்குத் தேவைப்படுகின்ற நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.