பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


தெள்ளத் தெளியப் பெயர் வந்த காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமற் போனலும், ஒரு சிறப் பான ஆட்டத்தைப் பற்றிய பெருமையினை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது என்ற திருப்தியை நாம் அடைகிருேம்.

9. டேபிள் டென்னிஸ் (Table Tennis)

'


டென்னிஸ் ஆட்டத்தை, உலகெங்கும் பிரபல மாக ஆடிக் கொண்டிருக்கும்பொழுது, அமெரிக்கா வில் உள்ள நியூ இங்கிலாந்து எனும் நகரிலிருந்து ஏறத்தாழ 1890ம் ஆண்டு காலத்தில், ஒரு புதிய விளையாட்டு எழுந்தது.

அதற்குப் பெயர் இன்டோர் டென்னிஸ் (Indoor Tennis) என்பதாகும். வெளியிலும், மற்றும் மைதானங்களிலும் விளையாடப் பெற்று வந்த டென்னிஸ் ஆட்டத்தின் அமைப்பிலே, இந்த ஆட்டம் அமையப்பெற்று இருந்தாலும், இதனை வீட்டுக்குள்ளே, சாப்பிடும் மேஜைமீது ஆடப்பட்டு வந்ததாலும், இதற்கு இன்டோர் டென்னிஸ் என்று பெயரிட்டனர்போலும்.

இதற்குரிய விளையாட்டு சாதனங்களான மட்டை, வலை, பந்து போன்றவற்றை உருவாக்கி