பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மாற்றாட்டக்காரரை ஆட விட்டு வெளியே சென்ற ஓர் ஆட்டக்காரர், மீண்டும் வந்து ஆடுகளத்தில் இறங்கி ஆட முடியாது, ஆள் மாற்றிய பிறகு, காயமடைந்த ஆட்டக் காரர், மீண்டும் விளையாட விரும்பினாலும், பங்கு பெற முடியாது. ஆட்டத்தை விட்டு நடுவரால் வெளியேற்றப்பட்ட ஓர் ஆட்டக்காரருக்குப் பதிலாக, வேறொரு மாற்றாட்டக்காரரை சேர்க்க அனுமதி கிடையாது நடுவரின் முன் அனுமதி பெற்றிருந்து, ஏதாவது ஒரு காரணத்தினால் ஆட்டம் நின்றிருக்கும் பொழுது மட்டுமே, மாற்றாட்டக்காரரை மாற்றி ஆட முடியும்.

32. குழு (Team)

ஒரு குழுவில் 11 ஆட்டக்காரர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அவர்களில் ஒருவர் இலக்குக் காவலர் மற்ற இருவர் கடைக் காப்பாளர்களாகவும், மூவர் இடைக் காப்பாளர்களாகவும் மீதி ஐவர் முன் வரிசை ஆட்டக்காரர்களாகவும் இருந்து விளையாடுவார்கள். 11 பேர்களுக்குக் குறைவாக இருந்தாலும், ஒரு குழுவின் ஆட்டத்தைத் தொடங்கலாம். தொடரலாம்.

33. ஆட்ட நேரம் (Time of Play)

ஆட்டத் தொடக்கத்திற்கு முன்பே, இரு குழுத் தலைவர்களும் இணங்கி ஏற்றுக் கொண்டாலொழிய, ஆட்ட நேரம் ஒவ்வொரு பருவமும் 85 நிமிடங்களாக, இரண்டு பருவங்களுக்கும் சேர்த்து 70 நிமிடங்கள் ஆகும். இடைவேளை பருவங்களுக்கிடையே 5 நிமிடம் உண்டு. ஆட்டம் தொடங்குவதற்கு முன், இரு குழுத் தலைவரும் ஒத்துக் கொண்டிருந்தாலொழிய, இடைவேளை நேரம் 10 நிமிடங்களுக்கு மேல் போகக் கூடாது.