பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


முடிவில், கரடுமுரடு போன்ற கடினத்தன்மையுடன் விளங்க வேண்டும். பாரபட்சம் இருவருக்கும் காட்டக் கூடாது என்பதில் இரட்டைப்படையல்லாத என்பதிலும் தெளிவாகின்றது.

ஒரே மாதிரியாக சமதளம் போல் இருந்து விடாமல், தவறுகளைக் கண்டிக்கும் திறமையுடையவராக இருக்க வேண்டும் என்று ஒரு கொள்கை நெறியை விளக்கும் வகையிலே தான் அந்த சொல் பிறந்திருக்கிறது.

அம்பயர் என்பவர் ஒரு தனிமனிதன், அதாவது odd Man என்கிறார்கள். அவர் ஒரு புதுமை வாய்ந்த மனிதன் என்ற பொருளும் இதற்கு உண்டு. இரண்டு குழுக்களும் சில சமயங்களில் தவறிழைத்து, முரண்படும் பொழுது அல்லது தவறிழைக்க முற்படும் பொழுது, தீர்வுகாண்பதிலே புதுமை வாய்ந்த மனிதனாக அவர் விளங்குகிறார்.

அம்பயரானவர் மூன்றாம் மனிதராகவும் இருக்கிறார். தமது பொறுப்பு, நல்ல முறையில் நடத்தித் தரவேண்டும் என்பதாகவே நடுவர் இருக்க வேண்டும். அவர் யாருக்கும் உற்றார் உறவினர் அல்லர். அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடும் இல்லை. எனவே, அவர் வேடிக்கை பார்க்க வந்து விட்டு, ஒரு குழுவை உற்சாகமாக ஆதரித்து உரக்க சத்தமிடும் பரபரப்பான பார்வையாளராகவும் வரவில்லை.

போட்டியில் ஏற்படும் குழுப்பத்தைப் போக்க, நல்ல முறையில் நடத்திக் குதூகலத்தை ஊட்ட,