பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கொண்டு சராசரியாக வினாக்களைத் தொடுக்க நினைக்கிறோம்! ஆனால், இணைப்பு இல்லாதது போல் தோன்றினாலும், இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுவது என்னும் பழமொழிக்கு ஏற்பவே, இந்த மணலும் விளையாடும் இடமும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது.

விளையாட்டு அரங்கத்திற்குள் மணல் எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடைகாணப் புகுவோமானால், நாம் ரோமானியர் ஆட்சி காலத்திற்குத்தான் செல்லவேண்டும். அத்தகைய சூழ்நிலையை இங்கே நாம் காண்கிறோம்.

ரோமானியர்களுக்கு (Romans) உடற்பயிற்சியில் ஒரு ஈடுபாடு உண்டு. அது உடல் நலத்திற்கும், இராணுவ சேவைக்கும் உதவுகிறது என்கிற காரணத்தால்தான் அதனை விரும்பிச் செய்தார்கள். ஆனால், விளையாட்டுக்களில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.

கிரேக்க நாட்டை ரோமானியர்கள் வென்று அடிமைப்படுத்தி விட்டார்கள். ஆனாலும், கிரேக்க நாட்டு விளையாட்டுக்களும் கலாச்சாரமும் அவர்களை கவர்ந்து கொள்ள இயலாமற்போயின.

பிறந்த மேனியுடன் உடற் பயிற்சி செய்வது, கட்டான உடலைப் பயிற்சி செய்து காப்பது, விளையாட்டுக்களில் போட்டியிடுவது என்பது