உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தொட்ட குறைக்குப் பரிகாரமாக, அல்லது, பரிவர்த் தனையாக, விட்ட குறையைத் தொட்டாள் சுந்தரி!அதிசயமான நேசமும் அபூர்வமான பாசமும் இரண்டடிக் கலந்து உயிரும் உயிர்ப்புமாகியிருந்த அவளது பெண் உள்ளத்திலே திரும்பத் திரும்ப அந்தக் கேள்விக்குறிதான் விதியாகச் சிரித்து அவளைச் சித்திரவதை செய்து கொண்டிருத்தது. எனக்கே சொந்த பந்தம் கொண்டிருக்கிற என் புருஷன்காரவுகளுக்கு நித்த நித்தம் முந்தானை விரிச்சுக் கிட்டு இருக்கிற எனக்குக்கூடத் தெரியாமல் பாதாளக் கேணியிலே விழுந்து சாக ஏனாம் எத்தனம் செஞ்சாகளாம் ? என் சொந்த மச்சான்காரர், என் வரைக்கும் அந்நியமான ஒரு கதை ஆகிப்பிட்ட என்னோட மாமன் மகன் முத்தையன் பேரை அவர் கிட்டே மாப்பு கேட்டாகளே, அதுக்கு உண்டான காரண காரியந்தான் என்னவாம் ?... ஆத்தாளே! மகமாயி ... மான ரோசத்துக்கு உசிரைப் பயணம் வச்சிட்டே என்னோட மானம் மரியாதையைக் கட்டிக் காவந்து பண்ணிக்கிட்டு வர்ற எந்தெய்வமே எனக்குச் சதம்னு நம்பியும் மதிச்சும் உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கிற உன் குஞ்சோட மஞ்சள் குங்குமத்தை நீதாண்டி தாயே, எப்பவுமே கட்டிக் காக்கவேனும் !...” தன்னை மறந்தவளாக, மெய்ம்மறந்த நிலவரத்தில் செருமினாள் சுந்தரி ! இடைவேளைக் கூத்து தொடர்ந்தது -தொடர் சேர்த்தது ! வரும் விதி இரவு தாங்கா தாமே ? உண்மைதானோ ?