பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

22. திறமையான பொறுமை!

சென், பகுதியில் புத்தகமும் புத்தகமும் என்று, ஒரு தலப்பைத் தந்திருந்தேன். அது என்ன புத்தகம், புத்தகம் என்று இரண்டு முறை வருவதுபோல் எழுதியிருந்தீர்கள். தவறாக வந்து விட்டதா என்ற உங்கள் கேள்வி புரிகிறது.

புது+ஆண்டு என்பது புத்தாண்டு என வரும். புது + ஆடை = புத்தாடை என்று அழைக்கப்படும். அதுபோலவே, புது + அகம் என்பது புத்தகம் ஆயிற்று.

புத்தகங்கள் விற்கப் போய், பல புதிய புதிய அனுபவங்களை ஏற்றுக்கொண்டு, சிரமப்பட்டு, முயன்றும் ஜீரணிக்க முடியாமல் ஜீரணித்துக் கொண்டு வந்ததால், எனது அகம் புது அகமாக மாறிக் கொண்டது என்பதைக் குறிக்கவே புது + அகம் = புத்தகம் என்பதாக மாறியது என்று நான் எழுதினேன்.

ஒரு பள்ளியில் புத்தகம் விற்கப்போய், அந்த உடற்கல்வித் துறை நண்பர், அந்தப் புத்தகங்களை மேஜை மீது வீசிப்போட, அது மிக வேகமாக விரைந்து வந்து என் நெஞ்சின் மீது மோதி நின்றதுடன், என சென்ற இதழில் எழுதியிருந்தேன்.

அந்தப் புத்தகம் என் நெஞ்சின் மீது மோதியவுடன், நான் ஒரு கணம் அப்படியே திகைத்துப்போய் அமர்ந்திருந்தேன். என் இலட்சிய வேகத்திற்குக் கிடைத்த முதல் அவமான அடி அது.