பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 27

சென்னையில் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் வந்து சேர, உதவிய நண்பர்களையும் சற்று ஒதுக்கினேன்.

இப்படி, நல்ல பல வேலைகள் பெற வாய்ப்புகள் வந்தாலும், நான் காரைக்குடிக்குப் படிக்க போகவேண்டும் என்று ஒரு விதி. என்னை விடாமல் தொடர்ந்ததே! அது தான்

ஆச்சரியம்.

சென்னைக்கு நான் படிக்கப் போகவில்லை என்று தெரிந்து கொண்ட என் நண்பர், வகுப்பு தோழர், விடுதி அறை தோழர் திரு டென்னிசன் அவர்கள். என்னை வந்து சந்தித்தார்.

நீஅழகப்பா, உடற்கல்விக் கல்லூரியில் சேர வேண்டும். முதல்வர் திரு ராப்சன், உன்னை வந்து சந்திக்கச் சொன்னார். என்று கூறினார்.

நானும் எந்த விதமான மறுப்பும் கூறாமல், சரி என்றேன்.

சரி என்று சம்மதித்த அந்த வார்த்தைதான், இன்று என்னை ஒரு சரித்திரமே எழுத வைத்திருக்கிறது என்றேன். குழந்தை நாதன் குறும்புப்பார்வையுடன், முறுவலித்தார்.

1959-60ம் ஆண்டு, நான் டிப்ளமோ வகுப்பில், சேர்ந்து படித்தேன். ஒட்டப்பந்தயங்களில் வெற்றிவீரன் பட்டம் பெற்றதும்: நாடகங்களில் ஆர்வமுடன் பங்கு பெற்றது எல்லாம், எந்த விதமான மாற்றங்களையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை.

கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டபோது தான், ஒரு புதிய பாதையில் பயணம் செல்லக் கூடிய வெளிச்சம் ஒன்று தெரிந்தது.

போட்டிகள் என்றால் எப்படியும் முதலாவதாக வந்துவிட வேண்டும் என்ற ஒர் ஊக்கம் என்னுள் எப்பொழுதும் அணையாத நெருப்பாகவே எரிந்து கொண்டிருக்கம்.