பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

எனக்கும் ஒருவர் வழிகாட்டியாக இருக்கிறார். அவரது மனங் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்பதில், நான் சிறிதும் தவறாமல் தொடர்ந்து கொண்டேன்.

300 பக்கங்களுக்கு மேலாக எழுதி முடித்து, அந்தத் தாள்களை திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பேன். சில இடங்களில் எனக்கு திருப்தி ஏற்படாதபோது மீண்டும் அதனைக் கிழித்து எறிந்து விட்டு திருத்தி எழுதுவேன்.

இப்படி அந்த 300 பக்கங்களை, மூன்று முறை திருத்தி எழுதி முடித்தேன். புத்தகம் எழுதி முடித்த பிறகு, மனதில் நிறைவுதான் ஏற்பட்டது. ஆனால் கூடவே ஒரு திகைப்பும், நம்மால் முடியுமா என்ற தவிப்பும் ஏற்பட்டது.

அதாவது, மூன்றாண்டு முயற்சிகளால் உருவான இந்த

  • * * r"To ... ாள் * நூலை, இரவு பகல் பாராது, இலட்சிய வேகத்தினால் விளைந்த இந்த நூலை, புத்தக வடிவில் எப்படி கொண்டு வருவது?

எனக்கோ, புத்தகம் போடக் கூடிய அளவுக்கு பண வசதி இல்லை. புத்தகம் போட்டாலும், விற்கக் கூடிய முறைகளும் தெரியாது. எனவே, என்ன செய்வது என்ற தவிப்பைத் தீர்க்க, குழந்தைநாதன் அவர்களும் கூடவே வந்தார்.

ஆமாம், நானும் அவரும் காரைக்குடியில் அப்போது இருந்த நான்கைந்து பதிப்பகங்களுக்கு புனித யாத்திரை போகும் பயபக்தியோடு சென்று வந்தோம்.

கல்லூரியில் பணியாற்றுகின்ற பேராசிரியர்கள் என்பதால், கைகுவித்து வணக்கம் செய்து, கெளரவமாக வரவேற்று, காஃபிக்கும் ஆர்டர் செய்து, புன்சிரிப்புடன் பேச்சைத் தொடங்கி, புத்தகம் போடவேண்டும் என்று சொன்னவுடன, பாம்பைப் பக்கத்தில் பார்த்தவர்கள் போல, பதறிப்போய் விடுவார்கள். முடிந்தால், பேச்சை மாற்றி விடுவார்கள். பலதடவைப் பேசிப் பார்த்தும் பயனில்லாமல் போயிற்று.